மோடி பதவியேற்பு விழாவை ஓங்கியடித்த சுத்தியல்... கதறக் கதற ஆணி புடுங்கும் #நேசமணி நேசர்கள்..!

By Thiraviaraj RMFirst Published May 30, 2019, 3:01 PM IST
Highlights

நேசமணியை மருத்துவமவைக்கு அனுப்பி வைத்து சமூகவலைதளங்களில் நாசமாக்கி வருகிறார்கள் மோடி எதிர்ப்பாளர்கள்.

ட்விட்டரில் #நேசமணி ஹேஷ்டாக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது இந்திய அளவில் நேசமணி ஹேஸ்டாக் முதலிடத்திலும்,  மோடிசர்கார்2 ஹேஷ்டாக் இரண்டாமிடத்திலும் உள்ளது.

 

மோடி இன்று மாலை பதவி ஏற்கவுள்ளார். அவரது பதவி ஏற்பை இருட்டடிப்பு செய்யவே மோடி எதிர்ப்பாளர்கள் சாதாரணமாக வைரலாகிய நேசமணி ஹேஷ்டேக்கை உலகம் முழுவதும் டிரெண்ட் ஆக்கி இந்தியாவின் பார்வையை மோடி பக்கம் இருந்து திசை திருப்ப முயல்கின்றனர் என பாஜக ஆதரவாளர்கள் சிலர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நேசமணி சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, செய்தி தொலைக்காட்சிகளிலும் பல செய்தித் தொகுப்புகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.   

நாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது இதுபோன்ற தேவை இல்லாத விஷயங்களை பேசி நேரத்தை நெட்டிசன்கள் வீணடிக்கின்றனர். இதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன என குற்றஞ்சாட்டுகின்றனர். 

நேசமணி பதிவிற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பதிலளித்து டுவீட் செய்து வருகின்றனர். மோடி பதவியேற்கும் விழா பற்றிய செய்திகள் குறைந்து நேசமணிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்திகள் சமூக வலைதளங்களில் பெரும்பான்மையாக பகிரப்பட்டு வருகிறது. ஆகையால், இது மோடி பதவியேற்பு விழாவை இரட்டடிப்பு செய்வதற்காக நேசமணியை உலக அளவில் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். ஏற்கெனவே மோடி தமிழகம் வந்ததையே போது கோபேக் மோடி என்கிற ஹேஸ்டாக்கை திமுகவினர் உட்பட சிலர் உலகம் முழுவதும் ட்ரெண்டாக்கிய நம்மவர்கள்  மோடி 2வது முறையாக பதவியேற்பதை பொறுத்துக் கொள்வார்களா? 

அடேய் யாருடா அந்த நேசமணி மோடி மைன்ட் வாய்ஸ் pic.twitter.com/rrA8GfHoGt

— எ.எஸ்.பிரபு (@asprabhu22)

 

அதனால், தான் நேசமணியை மருத்துவமவைக்கு அனுப்பி வைத்து சமூகவலைதளங்களில் நாசமாக்கி வருகிறார்கள் மோடி எதிர்ப்பாளர்கள் என்கிறார்கள். 

click me!