சித்தப்பன், பெரியப்பன், அங்காளி பங்காளிகளோடு டெல்லியை டறியலாக்கும் ஓபிஆர்!! குமுறும் ரத்தத்தின் ரத்தங்கள்

By sathish kFirst Published May 30, 2019, 2:24 PM IST
Highlights

நடந்து முடிந்த தேர்தலில் ரிசல்ட், கொஞ்சம் குஷி, கொஞ்சம் சோகம் என இருந்தாலும்,  பன்னீர் மகனின் வெற்றி பெற்றதை திமுகவை விட அதிமுகவையே எரிச்சலடைய வைத்துள்ளது. அதிமுக வரலாற்றில் போட்டிப் பாம்பாய் அடங்கிக்கிடந்த பன்னீரின் குடும்பம், மாமன் மச்சான் அங்காளி பங்காளிகள் என அடிக்கும் அளப்பறைகளுக்கு அளவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கிறது.
 

நடந்து முடிந்த தேர்தலில் ரிசல்ட், கொஞ்சம் குஷி, கொஞ்சம் சோகம் என இருந்தாலும்,  பன்னீர் மகனின் வெற்றி பெற்றதை திமுகவை விட அதிமுகவையே எரிச்சலடைய வைத்துள்ளது. அதிமுக வரலாற்றில் போட்டிப் பாம்பாய் அடங்கிக்கிடந்த பன்னீரின் குடும்பம், மாமன் மச்சான் அங்காளி பங்காளிகள் என அடிக்கும் அளப்பறைகளுக்கு அளவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கிறது.

தேனி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் உள்ள ஒரு தனியார் கோவிலில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று கல்வெட்டு வைத்து அளப்பறையை ஆரம்பித்தனர். கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் குறித்து அ.தி.மு.க. தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வெட்டு வைத்ததாக கோவில் நிர்வாகியான வேல்முருகன் என்பவரை கைது செய்தனர். கல்வெட்டு வைத்த நேரமா என்னன்னு தெரியல ஜெயிச்சி எம்பி ஆயிட்டாரு ஒபி.ரவீந்தர், ஆனால் ஓபிஆரின் நெருங்கியவர்கள் பண்ணும் லந்து தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. 

தேனி கல்வெட்டு சர்ச்சையை அடுத்து, ப.ரவீந்திரநாத்குமாரை "மத்திய அமைச்சர்" என்று குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. வார்டு செயலாளர் ஒருவர், தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ப.ரவிந்திரநாத்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நகரில் பல இடங்களில் சுவரொட்டி ஒட்டி உள்ளார். அதில் ப.ரவீந்திரநாத்குமார் பெயரோடு ‘எங்கள் மத்திய அமைச்சரே‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட அமைச்சர் பதவியும் உறுதியாகியிருக்கிறது.

இதேபோல் சமூக வலைதளங்களிலும் அ.தி.மு.க.வினர் ப.ரவீந்திரநாத்குமாரை ‘மத்திய அமைச்சர்‘ என்கிற அடைமொழியோடு பல்வேறு பதிவுகள் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ எந்த அறிவிப்பும் வெளியாகாத சூழ்நிலையில் ‘மத்திய அமைச்சர்‘ என்ற அடைமொழி கொடுக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், டெல்லியில் இன்று மாலை நடக்கவுள்ள பதவியேற்பு விழாவுக்கு தேனியிலிருந்து ஓபிஆரின் சித்தப்பா, பெரியப்பா, தம்பி, அங்காளி பங்காளி என செல்லியிலுள்ள தமிழ் நாடு விருந்தினர் இல்லத்துக்கு படையெடுத்துள்ளனர். 


ஓபிஆர் குடும்பம் டெல்லியில் முகாமிட்டிருக்கும் போட்டோ அதிமுகவினர் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த அம்மாவின் விசுவாசிகள், இதற்க்கெல்லாம் காரணம் அதிர்ஷ்டம் தான், கட்சியை வளர்தவர், உயிரை கொடுத்தவர், உழைத்தவர், சீனியர்கள் என எல்லோரையும் தூக்கி சாப்பிட்ட மாவீரன் அண்ணன் ஓபிஆர் தான். ரிசல்ட் வருவதற்கு முன்பு எம்.பி., எனவும், பதவி ஏற்காத முன்பு அமைச்சர் எனவும் போட்டு உலக சாதனை படைத்த வீராதி வீரன். இனி கழகம் அவர் கையில் தான். முதல் மரியாதையும் அவருக்கு தான் எனக் குமுறுகின்றனர்.

click me!