மோடி... தமிழகத்தை ஆள்வது பழனிச்சாமியோ, பன்னீரோ இல்லை: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. மாஸ் காட்டிய உதயநிதி.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2022, 1:08 PM IST
Highlights

தமிழகத்தை ஆள்வது பழனிச்சாமியோ, பன்னீர் செல்வமோ இல்லை, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்"  என திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழகத்தை ஆள்வது பழனிச்சாமியோ, பன்னீர் செல்வமோ இல்லை, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்"  என திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தி திணிப்பு செய்தால் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் மத்திய அரசை எச்சரித்தார். 

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இந்தியை தணிப்பதற்காக மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி இந்தி பேசாத மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்தும்,  நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு  நடத்துவதை கைவிடக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது, அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அதில் திமுக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மேடையில் உரையாற்றிய அவர் மத்திய பாஜக அரசை எச்சரித்து பேசியதாவது:- திமுகவின் முதன்மை கொள்கைகளில் ஒன்று இந்தி எதிர்ப்பு,  எனவே தேவைப்படும் பட்சத்தில் டெல்லிக்கு வந்து அவர்களின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம். 

இதையும் படியுங்கள்: Rahul: Bharat Jodo Yatra:பாரத் ஜோடோ நடை பயணம்: ராகுல் காந்தி 1000 கி.மீ தொலைவை எட்டினார்

ஒன்றியம் என்று சொன்னால் பிரதமருக்கு கோபம் வருகிறது, அதனால் நம் ஒன்றியம் என்றே சொல்லுவோம். நான் மோடி அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறவில்லை, தற்போது   தமிழகத்தை ஆள்வது எடப்பாடி பழனிச்சாமியோ, பன்னீர்செல்வமோ இல்லை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

இந்தித் திணிப்புக்கு எதிராக எங்கள் ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது பாஜகவின் கையில்தான் இருக்கிறது, தமிழகத்திற்குள் இந்தியை எந்த வழியில் கொண்டுவந்தாலும் அதை இந்தி தெரியாது போடா என நாங்கள் எதிர்ப்போம். 3 மொழிப்போரை திமுக சந்தித்துள்ளது. இந்த முறை நடக்கும் இந்தி எதிரிப்பு போரில்  திமுக மாணவர் அணி, இளைஞர் அணி வெற்றி பெறும். 

இதையும் படியுங்கள்:  குட்நியூஸ்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

இந்தி திணிப்பை கைவிடாவிட்டால் முதல்வரின் உத்தரவுடன் டெல்லிக்கு வந்து அவர்களின் அலுவலகம் முன்பு நாங்கள் போராடுவோம்.  2019 நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே  2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்டி அடிப்போம். 2024 பிரச்சாரத்திற்கு இந்த போராட்டம் சிறந்த துவக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு உதயநிதி பேசினார்.
 

click me!