புதுச்சேரியில் இந்திக்கு எதிராக திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!!

By vinoth kumarFirst Published Oct 15, 2022, 11:13 AM IST
Highlights

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக  இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. புதுச்சேரியிலும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திரளான திமுகவினர் திரண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் 1000 க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநில திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில கழக அழைப்பாளருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் பதாகைகளை ஏந்தியும், ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிடும் வரை திமுகவின் போராட்டம் தொடரும் எனவும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா எச்சரித்தார். 

இதையும் படிங்க;- இந்தியை திணிக்க மீண்டும் முயற்சித்தால் டெல்லிக்கே வந்து போராடுவோம்.. அமித்ஷாவை எச்சரித்த உயதநிதி.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்து வரும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ''இந்தியாவில் எந்த வகையில் இந்தியை திணித்தாலும், எங்களின் ஒரே பதில், எங்களுக்கு இந்தி தெரியாது போடா என்பதுதான். இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம், போராட்டமாக மாறாமல் இருப்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது'' என்றார். தமிழ்நாடு முழுவதும் இன்று கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி என அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

click me!