RS Bharathi: திமுகவுக்கு மோடி எதிரியே அல்ல...! ஆர். எஸ்.பாரதி அந்தர் பல்டி..!

Published : Dec 28, 2021, 09:05 AM IST
RS Bharathi: திமுகவுக்கு மோடி எதிரியே அல்ல...! ஆர். எஸ்.பாரதி அந்தர் பல்டி..!

சுருக்கம்

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு திமுக கருப்புக்கொடி காட்டுமா? என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக்கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம்.

எப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்து வந்த திமுக, திடீரென பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல என ஆர்.எஸ்.பாரதி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

சென்னையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கவிழா மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வருகை தந்தார். சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி  காட்டப்படும் என திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்தன. அதனடிப்படையில் சென்னையில் மொத்தம் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.  அதேபோல், Go Back மோடி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் திமுக அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறது என்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு " கெஸ்ட் " எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என ஆர். எஸ் பாரதி அந்தர் பல்டி அடித்துள்ளார். 

இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு  பேட்டியளிக்கையில்;- தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு திமுக கருப்புக்கொடி காட்டுமா? என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக ஏன் கருப்புக்கொடி காட்ட வேண்டும்? எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் அவருக்கு கருப்புக்கொடி காட்டினோம். ஆனால் இப்போது நாங்கள் அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். அவர் தமிழகத்தின் விருந்தினராக வருகிறார். நாங்களே அழைத்துவிட்டு நாங்களே கருப்புக்கொடி காட்டினால் அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக அவர்களை நாங்கள் அழைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அவர் வரவுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் எப்படி அவருக்கு கருப்புக்கொடி காட்ட முடியும்? எங்களுக்கு எதிராக அவர் ஏதாவது பேசியிருந்தால் அப்போது நாங்கள் அவரை  தவிர்த்திருப்போம். மோடி எங்களுக்கு எந்த காலத்திலும் எதிரியாக இருந்ததில்லை. பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியை அல்ல, இந்துத்துவா தான் எதிரி.

அதிமுக ஆட்சியின் போது அவருக்கு கருப்புக்கொடி காட்டி நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றால் அவர் தமிழர்களுக்கு எதிராக அப்போது செயல்பட்டார். அதனால் எதிர்ப்பு தெரிவித்தோம், இப்போதும் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்து இருக்கிறோம், அவர் செய்து தருவதாக கூறி இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் இருக்கிறோம். அதிமுகவை போல நாங்கள் இல்லை. அவர்கள் சொல்வதற்கெல்லாம் அதிமுகவினர் தலையாட்டினார்கள். நாங்கள் யாருடைய காலிலும் விழவில்லை. திமுக தன்மானத்தோடு நடந்துகொள்கிறது என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுவரை பாஜகவையும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த ஆர்.எஸ்.பாரதி திடீரென திமுகவுக்கு மோடி எதிரியே அல்ல கூறியிருப்பது தமிழக பாஜகவின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!