தங்கமணி ரெய்டில் சிக்கியதுக்கு காரணம் இவரா..? பரபரக்கும் கொங்கு மண்டல பாலிடிக்ஸ்…

Published : Dec 28, 2021, 07:15 AM IST
தங்கமணி ரெய்டில் சிக்கியதுக்கு காரணம் இவரா..? பரபரக்கும் கொங்கு மண்டல பாலிடிக்ஸ்…

சுருக்கம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் வரிசையில் ஐந்தாவது நபராக, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

சோதனையின் முடிவில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கை மூலம் தெரிவித்தனர்.  இதுமட்டுமின்றி, 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்புப் பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.இது தொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணீதரன், மகள் லதாஸ்ரீ ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணீதரன், மகள் லதாஸ்ரீ ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணீதரன், மகள் லதாஸ்ரீ ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தங்கமணி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது தந்தை மறைந்த பெருமாள் சிறிய அளவில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கமணி 2006-ம் ஆண்டு திருச்செங்கோடு சட்ட சபை தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு குமாரபாளையம் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2011-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை வருவாய்த்துறை அமைச்சராகவும், தொழில் ஸ்டீல் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராகவும் தங்கமணி பொறுப்பு வகித்துள்ளார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், மின்துறை, மதுவிலக்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்த காலகட்டங்களில் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல வழிகளில் முறைகேடாக பணம் சேர்த்து அதன்மூலம் அவர் சொத்துக்களை வாங்கி உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டங்களில் தனது மனைவி, மகன், மகள் பெயரிலும் தங்கமணி சொத்துக்களை வாங்கி இருக்கிறார். தங்கமணியின் மகன் தரணீதரன் எர்த் மூவர்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொழிலுக்கு முறைகேடான வழியில் வருவாய் ஈட்டி அதன்மூலம் சொத்துக்களை வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கமணியின் மனைவி சாந்தி எந்த தொழிலிலும் ஈடுபடாமல் இருந்ததாகவும், அதேநேரத்தில் அவரது பெயரில் கணக்கில் வராத சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையம் கிராமம் ஆகும். அவரது மகன் திருமணமாகி மனைவி சாராவுடன் சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ராஜாபுரத்தில் வசித்து வருகிறார். மகள் லதாஸ்ரீ திருமணமாகி கணவருடன் பள்ளிபாளையம் அருகே உள்ள கலியனூர் கிராமத்தில் வசித்து வருகிறார். தங்கமணி அமைச்சராக இருந்தபோது தங்கள் பகுதிகளில் இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘இந்த சோதனையில் தங்கமணிக்கு நெருக்கமான பி.எஸ்.கே., கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் தீவிர சோதனை நடந்தது. நிறுவனத்தின் உரிமையாளர் பெரியசாமியின், நடுகோம்பை வீடு, அவரது மகன் அருண்குமாருக்கு சொந்தமாக, கொல்லிமலை, வால்குழிபட்டியில் உள்ள பண்ணை வீடு, தின்னனூர் பஞ்சாயத்து, மங்களம்பட்டியில் உள்ள அருண்குமார் தோட்டம் ஆகிய இடங்களும் தப்பவில்லை.

பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமனி ஆடிட்டர் அலுவலகம், சேலத்தில் உறவினர் வீடு ஒன்று, பரமத்தியில் 5 இடங்களும் என சரமாரியாக சோதனை நடத்தி இருக்கிறார்கள்.  தங்கமணிக்கு பினாமிகள் மட்டும் 30 பேருக்கும் மேல் இருக்கின்றனர். இதில் லெட்டர் பேடுகள், பினாமி கம்பெனிகள், முகவரி மட்டும் உள்ள போலி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சலித்து இருக்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு துறையினர். 

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன்  சில கணக்குகளை தந்தையிடம் மறைத்து, வைத்தார் என்று கூறப்படுகிறது. தற்போது அந்த கணக்குகளால் தான் வசமாக சிக்கியிருக்கிறார் தங்கமணி. இந்த ரெய்டுக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று கூறப்பட்டாலும், தங்கமணியின் மகனால் தான் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் மாட்டிக்கொண்டிருக்கிறார் தங்கமணி. இல்லையென்றால் சோதனையில் எந்த ஆவணமும் சிக்கியிருக்காது. முன்னாள் அமைச்சர்  தங்கமணி, கட்சியின் சீனியர்களிடம் இதனை சொல்லி புலம்பியிருக்கிறார். எஸ்.பி வேலுமணி போல தானும், லஞ்ச ஒழிப்புத்துறை கையில் வசமாக சிக்கி கொண்டோமா ? என்ற அச்சத்தில் இருக்கிறார்’ என்று கூறுகிறார்கள் அதிமுகவினர்.
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!