மோடிக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லையா.? உங்க வீட்டு பிள்ளைகள் தமிழில் படிக்கிறார்களா.? டாராக கிழித்த வானதி.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 10:21 AM IST
Highlights

ஆனால் அவ்வாறு செய்யும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் கூட தமிழ் மொழியில் இங்கே படிப்பதில்லை என அவர் குற்றம் சாட்டினார். தமிழ் கலாச்சாரத்தின் மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் பற்று கொண்டவர்களுக்கு மட்டுமே தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், அந்த அடிப்படையில்தான் நாம் பிரதமரும் இருந்து வருகிறார். 

பாஜகவுக்கும் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கும் ஏதோ தொடர்பு இல்லாதது போலவும், பிரதமர் மோடிக்கு தமிழின் பெருமைக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் ஒரு பிம்பத்தை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ப்ளூ ஓசன் புக்ஸ் மற்றும் அகண்ட தமிழுலகம் இணைந்து வணக்கம் தமிழகம், பிரதமரின் தமிழ் முழக்கம் என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், ஒன்றிய மீன்வளம் மற்றும் பால்வளம், தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தகத்தின் முதல் பிரதியை காணொளி வாயிலாக ஒன்று அமைச்சர் பூபிந்தர் சிங் யாதவ் வெளியிட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் சீனிவாசன் மற்றும் சுதாகர் ரெட்டி பெற்றுக்கொண்டனர். அந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய வானதி சீனிவாசன், கூறியதாவது, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் ஏதோ தமிழ் மொழிக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் பாஜகவுக்கும் தொடர்பே இல்லாதது போலவும், குறிப்பாக மத்திய அரசுக்கும், மோடிக்கும் தமிழின் பெருமைக்கும் சம்பந்தமே இல்லாதது போலவும் ஒரு மாய பிம்பத்தை இங்குள்ள அரசியல் கட்சிகள்  உருவாக்கி வருகின்றன.

ஆனால் அவ்வாறு செய்யும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் கூட தமிழ் மொழியில் இங்கே படிப்பதில்லை என அவர் குற்றம் சாட்டினார்.தமிழ் கலாச்சாரத்தின் மீதும் தமிழ் சமூகத்தின் மீதும் பற்று கொண்டவர்களுக்கு மட்டுமே தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், அந்த அடிப்படையில்தான் நாம் பிரதமரும் இருந்து வருகிறார். உலகில் உள்ள மூத்த மொழி தனது நாட்டில் உள்ள தமிழ் மொழி என பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். இதுதான் பிரதமரின் தமிழ்பற்று என வானதி சீனிவாசன் கூறினார்.

click me!