ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திய முதல்வர் ஸ்டாலின்.. வீட்டுக்கே ஓடிவந்து பார்த்த டாடா நிறுவன தலைவர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 9:22 AM IST
Highlights

உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக போர்டு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக போர்டு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அதை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் அந்த தொழிற்சாலை தொடர்ந்து செயல்படுவதற்கான சூழல் உருவாகி உள்ளது. பல்வேறு நெருக்கடி காரணமாக 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக போர்டு நிறுவனம் ஏற்கனவே அறிவிப்பு செய்துள்ளது. இந்த அறிவிப்பு அங்கு  பணியாற்றி வரும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்: தலித்துகள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என சதி. ஜமீன் தேவர்குளம் வெற்றிமாறன் தீக்குளித்து உயிரிழப்பு. திருமா ஆவேசம்

உடனே தமிழக அரசு தலையிட்டு தொழிற்சாலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக அரசு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து வரும் நிலையில், அந்த நிறுவனம் வேறு ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்திற்கு விற்கும் பட்சத்தில் தொழிலாளர்கள் வேலை உறுதி செய்யப்படும் என்றும், அதேநேரத்தில் தமிழகத்திற்கும் வரி வருவாய் கிடைக்கும் என்றும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஃபோர்டு நிறுவனம் டாடா நிறுவனத்திடம்,  நிலம் மற்றும் அங்கு கார் தாயாரிக்கும் தொழிற்சாலை என அனைத்தையும் விற்க பூர்வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: தேர்தல் நேர்மையாக நடந்தால் அதிமுகதான் வெற்றி பெறும்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. கதறும் ஜெயக்குமார்.

தமிழக அரசும் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் டாடா நிறுவன தலைவர் நடராஜன் சந்திரசேகரன் சந்தித்துப் பேசினார். அப்போது டாடா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், சென்னையை அடுத்த சிறுசேரியில் டிசிஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!