தேர்தல் நேரத்தில் வேண்டுதல்.. 7 கி.மீ. பாதயாத்திரையாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின்.!

By Asianet TamilFirst Published Oct 7, 2021, 9:01 AM IST
Highlights

திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
 

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா தெய்வப் பக்தி உள்ளவர். பல கோயில்களுக்கு செல்லும் அவர், தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று பல கோயில்களில் வேண்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சமயபுரம் கோயிலுக்கு வந்திருந்தார். தற்போது பிரார்த்தனை நிறைவேறிய நிலையில், கொரோனா உச்சத்தில் இருந்ததால், அவரால் கோயிலுக்கு செல்ல முடியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பிரார்த்தனை துர்கா நிறைவேற்றி வருவதாகத்தெரிகிறது. கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று துர்கா ஸ்டாலின் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

 
இந்நிலையில் திருச்சி வந்த துர்கா ஸ்டாலின், திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். மாலை 5 மணிக்கு மேல், அங்கிருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்ட துர்கா ஸ்டாலின், 7 கி.மீ. தூரத்தை 2 மணி நேரமாக நடந்து கோயிலுக்கு வந்தார். அங்கு மாரியம்மனை  துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். பின்னர் இரவு டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கிய துர்கா ஸ்டாலின், இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் உறையூர் வெக்காளியம்மன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

click me!