வளர்ச்சி, தன்நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என மோடி புகழாரம். நிர்மலா சீதாராமன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்து.

By Ezhilarasan Babu  |  First Published Feb 1, 2021, 4:07 PM IST

இது வளர்ச்சி மற்றும் புது நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தயாரித்துள்ள நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மோடி கூறியுள்ளார்.  


இது வளர்ச்சி மற்றும் புது தன்நம்பிக்கையூட்டும் பட்ஜெட் என்று பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் சிறப்பான பட்ஜெட்டை தயாரித்துள்ள நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மோடி கூறியுள்ளார். 

கொரோனா தொற்று, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம் என கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தவும், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

 

குறிப்பாக தமிழகத்திற்கு சாலை கட்டமைப்பு ஏற்படுத்த 1.3 லட்சம் கோடி ரூபாய் நிதியை நிர்மலா சீதாராமன் ஒதுக்கியுள்ளார். அதே நேரத்தில் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாவில்லை, ஆனாலும் 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பெட்ரோல் டீசல் மீது பொதுமக்களை பாதிக்காத வண்ணம் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த  பட்ஜெட்டுக்கு மக்கள் மத்தியில் சம அளவில் எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறி வரும் நிலையில், பிரதமர் மோடி இந்த பட்ஜெட் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் பட்ஜெட் என வர்ணித்துள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள அவர், அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் 2011ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் முன்வைக்கப்பட்டுள்ளது, இதில் எதார்த்த உணர்வும், வளர்ச்சியின் நம்பிக்கையும் உள்ளது, இன்றைய பட்ஜெட் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் புதிய நம்பிக்கையை தருவதாக உள்ளது. உலக அளவில்  மனித இனத்திற்கு எதிராக கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இன்றைய பட்ஜெட்  இந்தியாவுக்கு புதிய நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது.  இந்த பட்ஜெட் சுகாதார கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது, நாடு தன்னிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன, ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், மனித குலத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்தல், நவீனத்துவத்தை நோக்கி இளம் தலைமுறையை நகர்த்துவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த பட்ஜெட் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என பல வல்லுனர்கள் இந்த பட்ஜெட்டை  மிகவும் வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். இந்த பட்ஜெட் நிதி மற்றும் ஆரோக்கியம் இரண்டையும்  உறுதி செய்வதாக உள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக அரசு பொது மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்கும் என பலர் கூறிவந்தனர். ஆனால் அதை கருத்தில் கொண்டு அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்த வண்ணம் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் எம்எஸ்எம்இ மற்றும் உட்கட்டமைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இல்லாத அளவிற்கு சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் தெற்கு மற்றும் வடக்கில் லே, லடாக் போன்ற பகுதிகளில்  வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாட்டின் விவசாயத்துறையை வலுப்படுத்த விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க விவசாயத்தையும், கிராமத்தையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் மையப்புள்ளியாக கிராமங்களும் விவசாயிகளும் உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.  இவ்வாறு மோடி கூறியுள்ளார்.
 

click me!