ஜனநாயகத்தை அடித்து நொறுக்கும் மோடி அரசு... புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதா..? விசிக காட்டமான விமர்சனம்.!

By manimegalai aFirst Published Dec 13, 2020, 10:07 PM IST
Highlights

ஒருபுறம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து நொறுக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிதாக நாடாளுமன்றத்தைக் கட்டுகிறோம் என்று சொல்வது வரலாற்று நகை முரணாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. அதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ’தமிழகத்தில் காலூன்றுவதற்காக பாஜகவும் சங்கப் வேண்டிய வரலாற்றுக் கடமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருபரிவாரங்களும் கடுமையான முயற்சிகளைச் செய்து வருகின்றன. ஆட்சியில் உள்ளவர்களோடு சேர்ந்துகொண்டு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. சமூக நீதி மண்ணான தமிழகத்தைப் பாதுகாக்க க்கிறது. எனவே, மதவாத, சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகளைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் வகையில், உரிய செயல் திட்டங்களையும் தேர்தல் வியூகங்களையும் வகுத்திட வேண்டும்.
இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது இந்தியாவெங்கும் குறிப்பாக டெல்லியில் மிகுந்த எழுச்சியோடு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளையும் அறவழிப் போராட்டத்தையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. வேளாண் துறையை முற்றாக ஒழிக்கவும், விவசாய நிலங்களையெல்லாம் அம்பானி, அதானி ஆகிய பாஜக ஆதரவு கார்ப்பரேட் கும்பலிடம் சட்டவழியில் ஒப்படைக்கவும் ஏற்றவகையில் பாஜக அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அண்மையில், சென்னை- கல்லறை நகர் பகுதிவாழ் தலித் மக்களின் குடியிருப்புகளைக் கொட்டும் மழையிலும் கரோனா நெருக்கடியிலும் இடித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர். சிவகங்கை இளையான்குடி அருகே தலித் பெண்மணி நாகலட்சுமியின் பிணத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல விடாமல் சாதிவெறியர்கள் தடுத்தனர். பெரம்பலூர்  சிறுகுடல் கிராமத்தில், தலித் சிறுவர்களைக் கையால் மனிதக்கழிவை அள்ள வைத்த கொடுமையை சாதிப்பித்தர்கள் அரங்கேற்றியுள்ளனர்;
தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத அவலம் அதிகரித்துள்ளது. இப்படியான வன்கொடுமைகளுக்கு எதிராகக் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் சாதியவாதிகளுக்குத் துணைபோவதால் அவை மென்மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன. தலித் மக்கள் மீதான இத்தகைய வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாறு அதிமுக அரசை வலியுறுத்துகிறது.
கரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது அனைத்து மக்களுக்கும் அதை இலவசமாகவே அளிக்க வேண்டும் என்று இந்த உயர்நிலைக் குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். ஒருபுறம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து நொறுக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிதாக நாடாளுமன்றத்தைக் கட்டுகிறோம் என்று சொல்வது வரலாற்று நகை முரணாக உள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிய நாடாளுமன்றம் என்பது தேவையற்றது. அந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

click me!