விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது மோடி அரசு..!! ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தவ்ஹீத் ஜமாஅத்.

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 4:37 PM IST
Highlights

இதனால் உணவுப் பொருளை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ள முடியும் செயற்கை முறையில்  உணவு தட்டு பாடுகளை ஏற்படுத்தி உணவு பொருளின் விலையை அதிகரிக்க செய்யலாம்.
 

மத்திய அரசு கொண்டு வரும்  விவசாய திருத்த சட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு விவசாய மசோதாவை நிறைவேற்றி இருப்பதை திரும்ப பெற வேண்டும். எனவும் அது வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- மத்திய மோடி அரசு பொறுப்பேற்றது முதல் மக்களின் பிரச்சனைகளை பற்றி கவலை படாமல் கார்பரேட் நிறுவனங்களின் அரசாக செயல் பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான சட்டம் என்ற பெயரில் மசோதாவை நிறைவேற்றி விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. 

விவசாய பொருட்களை நேரடியாக தனியார் வாங்குவதின் மூலம் விவசாய பொருளுக்கான கூடுதல் விலை கிடைக்காமல் போகும்.நாளடைவில் தனியார் கேட்கும் பொருளை பயிர் செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். தனியாருக்கு விவசாய பொருள் விற்கப்படும் போது   விவசாயிகளுக்காக அரசு செய்யும் இலவச மின்சாரம், மானியம், பயீர் காப்பீட்டு தொகை என அனைத்தும் ரத்தாகும். இந்த சட்டத்தில் அரிசி,கோதுமை,பருப்பு, எண்ணை உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது மத்திய மோடி அரசு. 

இதனால் உணவுப் பொருளை ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து கொள்ள முடியும் செயற்கை முறையில்  உணவு தட்டு பாடுகளை ஏற்படுத்தி உணவு பொருளின் விலையை அதிகரிக்க செய்யலாம். விலை வாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும் கடந்த ஆறு ஆண்டுகளில் பல்லாயிர கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்த போதும், டெல்லியில் மாத கணக்கில் விவசாயிகளின் உரிமைக்காக போராடிய போதும் கண்டு கொள்ளாத மோடி அரசு என்பதை யாரும் மறக்க முடியாது. விவசாயிகளை கூலிகளாக  மாற்றும் இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

click me!