கரும்பு காட்டுக்குள் கான்கிரீட் போட்டு நடந்த தலைசிறந்த விவசாயி மு.க.ஸ்டாலின்.. குத்திக் கிழிக்கும் குத்தீட்டி

By Thiraviaraj RMFirst Published Sep 25, 2020, 4:32 PM IST
Highlights

விளைநிலங்கள் எல்லாம் வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் மீத்தேனுக்கும் கெயிலுக்கும் அன்று ஒப்பந்த கையெழுத்துப் போட்ட நீங்க ஒரு விவசாயி விஞ்ஞானி அல்லவா?

ஏரோட்டும் உழவினமும், வாயோட்டும் வசனமும் என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் குத்தீட்டி எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது.

 

அதில், ’’விவசாயம் தெரிந்ததால்தான் வேளாண் மசோதாவை எதிர்க்கிறேன் என்கிறார் மு.க.ஸ்டாலின். கரும்பு காட்டுக்குள் கான்கிரீட் ரோடு போட்டு நடக்கும் போதே தெரியாதாக்கும்? நீங்க ஒரு தலைசிறந்த விவசாயி என்று... அதுமட்டுமா? விளைநிலங்கள் எல்லாம் வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கும் மீத்தேனுக்கும் கெயிலுக்கும் அன்று ஒப்பந்த கையெழுத்துப் போட்ட நீங்க ஒரு விவசாயி விஞ்ஞானி அல்லவா? எதிர்க் கட்சியாக இருந்தால் எதையும் எதிர்க்கணும்கிறதையே நினைத்து அதையே இலக்கணமாக கொண்டிருக்கும் நீங்க கடந்த காலத்தில் நீங்க ஆதரித்த திட்டங்களையே இப்போது நீங்களே எதிர்ப்பதும், அன்று நீங்க எதிர்த்த எல்லாவற்றையும் என்று நீங்களே ஆதரிப்பதும் என கொள்கையற்ற ஒரு கோமாளி கூட்டமாக திமுகவை மாற்றியிருக்கிறது உங்களது அதிகாரப் பித்து. 

வால்மார்ட்டுக்கு வால்பிடித்து, உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒத்தூதியது, ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு துணை போனது என்றெல்லாம் இத்தாலி காங்கிரசுக்கு மத்தளம் அடித்த நீங்க, இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் இயக்கங்கள் எத்தகைய நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்பது உங்களுக்கு முதுமை வந்த அளவுக்கு முதிர்ச்சி பெறவில்லை என்பதையே காட்டுகிறது.

 அதனால, திருவாளர் டமால்பதி இனியும் ஏரோட்டும் உழவினத்தை வாயோட்டும் வசனங்களால் ஏமாற்ற முடியாது’’ என கடுமையாக விமர்சித்துள்ளனர். 

click me!