மோடி அரசு இரக்கமற்றது... கொடூரமானது... ப.சிதம்பரம் ஆவேசம்..!

Published : May 25, 2021, 11:51 AM IST
மோடி அரசு இரக்கமற்றது... கொடூரமானது... ப.சிதம்பரம் ஆவேசம்..!

சுருக்கம்

மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். மோடி அரசு இரக்கமற்றதாகவும், கொடூரமாகவும் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். மோடி அரசு இரக்கமற்றதாகவும், கொடூரமாகவும் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், ’மாநிலங்கள் நேரடியாக வெளிநாட்டு மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியது' சுயநலமிக்க முடிவு. இந்தியாவில் பைசர், மாடர்னா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு இன்னும் அனுமதியளிக்கவில்லை. அப்படியிருக்கும் போது எவ்வாறு மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை அந்த நிறுவனங்கள் விற்பனை செய்வார்கள்.

தடுப்பூசி கொள்முதலை பரவலாக்க வேண்டும் என்று நாங்கள் கூறிய அறிவுரைகளையும், நீதிமன்றங்கள் கூறிய ஆலோசனைகளையும் மத்திய அரசு புறக்கணிக்கிறது. தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகிறார்கள். மோடி அரசு இரக்கமற்றதாகவும், கொடூரமாகவும் இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை