மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது.. உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்.. சோனியா நெருக்கடி.

By Ezhilarasan BabuFirst Published May 7, 2021, 2:59 PM IST
Highlights

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் நிலைமை முற்றிலும் மோசமடைந்து வருகிறது. இதை முறியடிக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மோடி அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை கொரோனா பாதிப்பு காட்டுகிறது என்றும் கொரோனா வைரசை எதிர் கொள்வது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதன் வேகம் குறைந்தபாடில்லை. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி நாட்டில் மொத்த பாதிப்பு இரண்டு கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து தாண்டியுள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 62 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கர்நாடகாவில் 49 ஆயிரத்து 58 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் 42,464 பேரும், தமிழ்நாட்டில் 24 ஆயிரத்து 898 பேரும், டெல்லியில் 19 ஆயிரத்து 133 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் தொடர்ந்து 10வது நாளாக நேற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரேநாளில் நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.  வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நாட்டில் எடுக்கப்பட்டு வரும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் நிலைமை முற்றிலும் மோசமடைந்து வருகிறது. இதை முறியடிக்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

மோடி அரசு கொரோனா விவகாரத்தில் தோல்வி அடைந்து விட்டது என்பதையே  தற்போதைய சூழல் காட்டுகிறது. மோடி அரசு வளங்களையும், அதிகாரத்தையும் சரியாக பயன்படுத்தவில்லை. தற்போது நாடு சந்தித்து வரும் இக்கட்டான நிலைமையில் மக்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கவில்லை. மக்கள் மீது அனுதாபம் இல்லாத அரசியல் தலைமையாகவே மோடி தலைமை உள்ளது என்றார். பாஜக ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்கள் மீதே கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேபோல சமூக ஊடக தளங்களில் மக்கள் உண்மையை எழுதுவதற்கு கூட உரிமை மறுக்கப்படுகிறது. தற்போதைய சூழலை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள அவர், மத்திய அரசு மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

click me!