முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!

By vinoth kumarFirst Published May 7, 2021, 2:55 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்வர் பொறுப்பேற்ற ஸ்டாலின் கோட்டைக்குச் சென்று முதல் கையெழுத்தாக 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000. அதில் இந்த மாதமே ரூ.2000 வழங்க வேண்டும், அரசின் சாதாரணப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை செலவை அரசே ஏற்கும், பால் விலை ரூ.3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்துக்கு தனித்துறை, அதிகாரி நியமனம் என்பதே அந்த 5 அரசாணைகள் ஆகும்.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தனது அரசை நெருக்கடியான காலகட்டத்தில் திறம்பட நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்காக நேர்மையாக திறமையாக இயங்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதில், உதயந்திரன், உமாநாத், எம்.எஸ் சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். 

click me!