வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. இந்த பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது மழை.

Published : May 07, 2021, 01:30 PM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. இந்த பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு பிச்சு உதறப்போகிறது மழை.

சுருக்கம்

09.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

உள் கர்நாடகா முதல் கேரளா வரை  1 கிலோமீட்டர் உயரத்தில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும், 07.05.2021: வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 08.05.2021: வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தேனி, கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். 


09.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.10.05.2021, 11.05.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக  மாலை முதல் காலை வரை வெக்கையாகவும்,  இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு: 11.05.2021 முதல் 13.05.2021 வரை மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2  முதல் 3  டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூட்டும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன்  காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு (சென்டிமீட்டரில்): பர்லியார் (நீலகிரி) 14,அலகாரி எஸ்டேட் (நீலகிரி) 8,போடிநாய்க்கனுர் (தேனி), குன்னூர் (நீலகிரி) தலா 7, பெரியகுளம் (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 4,சூரன்குடி (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 3, சாத்தூர்  (விருதுநகர்), சங்கரன்கோயில் (தென்காசி), பேரையூர்  (மதுரை), மேட்டுப்பாளையம் , சத்தியமங்கலம்  (ஈரோடு) தலா 2 .
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?