மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா.. தயாநிதியை கட்டி தழுவிய வரவேற்ற உதயநிதி.. வைரலாகும் புகைப்படம்..!

Published : May 07, 2021, 02:08 PM IST
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா.. தயாநிதியை கட்டி தழுவிய வரவேற்ற உதயநிதி.. வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில், தயாநிதி அழகிரியை கட்டியணைத்து உதயநிதி வரவேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில், தயாநிதி அழகிரியை கட்டியணைத்து உதயநிதி வரவேற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னாள் மத்திய அமைச்சரும, திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி. கடந்த 2014ம் ஆண்டு கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. கடந்த ஜனவரி 3ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி;- கருணாநிதியிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக வர முடியாது. என் ஆதரவாளர்கள் விடமாட்டார்கள்  என்று கூறியது திமுகவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திமுகவை பழிவாங்க அவர் பாஜக இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது. 

பின்னர், திமுக குறித்து எந்த கருத்தையும் கூறாமல் மு.க.அழகிரி அமைதி காத்து வந்தார். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பதவி ஏற்பு விழாவில் முக.அழகிரி கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் முக.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். சகோதரர் தயாநிதியை பார்த்ததும் உதயநிதி பாசத்தில் கட்டியணைத்து வரவேற்றார் . இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!