ஜிஎஸ்டி பெயரால் மோடி அரசு தாதாயிசம்.. டார் டாராக கிழித்த திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 20, 2021, 2:58 PM IST
Highlights

மத்திய வேளாண்  சட்டங்களை எதிர்ப்பததை போலவே தொழிலாளர் புதிய சட்டங்களை எதிர்க்கவும் வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வோம் என்றார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மாநில உரிமைகளைப்  பரிக்கும் மத்திய அரசின் தாதாயிசத்தை விடுதலை சிறுத்தைகள் எதிர்க்கிறது என்றும், நீட் தேர்வை ஒழிப்பதற்கு வழிமுறைகள் இருக்கிறது என்றும், அதன்படி திமுக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, புதிய வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் சட்ட திட்டங்களை எதிர்த்து  எதிர்க்கட்சிகளின் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்ததை அடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. 

அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செய்தியாளர்களை சத்தித்த திருமாவளவன் கூறியதாவது:-  சோனியா அம்மையாரின் காணொளி கலந்தாய்வுக்கு பிறகு மத்திய அரசை எதிர்த்து 20ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் போராட்டம் துவங்கப்பட்டது, அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது, மத்திய வேளாண்  சட்டங்களை எதிர்ப்பததை போலவே தொழிலாளர் புதிய சட்டங்களை எதிர்க்கவும் வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வோம் என்றார். பெட்ரோல் டீசல்  விலைவாசியில் ஜிஎஸ்டி கொண்டு வருவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்படி அணுகுகிறது என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 

ஜிஎஸ்டி வரி விதிப்பு கூடாது, மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் தாதாயிசத்தை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது, தமிழகத்துக்கு வர வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய்களை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை, எனவே விடுதலை சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிப்பை  எக்காரணத்தைக் கொண்டும் ஏற்காது என தெரிவித்தார். நீட் தேர்வு ரத்து தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்த அவர், நீட் தேர்வு கூடாது என்பதுதான் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் நிலைப்பாடு, ஆனால் அதை ரத்து செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது, அதன்படிதான் தமிழக அரசு அதை கையாளுகிறது. இதற்காக அரசு சட்டசபையில் மசோதா இயற்றியது, அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அது சட்டமாகும், ஆனால் அதற்கு அவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் நிச்சயம் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

click me!