7வது படிக்கும்போதே பென்ஸ் கார்... ஃப்ளாஷ்பேக் சொல்லும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி..!

By Thiraviaraj RMFirst Published Sep 20, 2021, 2:32 PM IST
Highlights

நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். 

என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு வெறும் ரூ.5 லட்சம் தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 2016 முதல் 2021 வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், ரூ.34 லட்சம், அமெரிக்க டாலர், வைரம், தங்கம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 9 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அவரது இல்லத்துக்கு பின்புறம் காலி இடத்தில் 275 யூனிட் மணல் இருந்தது கண்டறியப்பட்டது.

இது குறித்து விளக்கமளித்துள்ள முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ’’எனது ரோல்ஸ் ராய்ஸ் காரின் மதிப்பு ரூ.5 லட்சம் மட்டுமே. என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது. நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு பென்ஸ் காரை தந்தை வாங்கி தந்துள்ளார். நான் ஆடம்பரத்தை விரும்பாதவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்கு? வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்துள்ளேன். அதற்கு அரசின் ரசீது இருக்கிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!