அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரங்களை பிரதமர் மோடியிடும் தமிழக பாஜக நிர்வாகிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் பிளவு..?
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அடுத்த நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணியிடம் அதிமுக மிகப்பெரிய தோலைவியை அடைந்தது. சட்டமன்ற தேர்தலின் போதே அதிமுக கூட்டணியில் அமமுகவை சேர்க்க வேண்டும் என பாஜக விரும்பியது. அப்போது தான் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கமுடியும் என கூறியது ஆனால் இதனை ஏற்க இபிஎஸ் தரப்பு மறுத்துவிட்டது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மிகப்பெரிய தோல்வி அதிமுகவிற்கு கிடைத்தது.
மோடியை சந்திக்காமல் திரும்பிய இபிஎஸ்
இதனையடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் என இருவரும் மாறி மாறி அதிமுக நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். இரண்டு பேரும் நாங்கள் தான் அதிமுக என கூறி வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பாஜகவும் அதிமுக பிளவுபட்டதை விரும்பவில்லையென்றே கூறப்படுகிறது. அதிமுக ஒற்றுமையோடு இருந்தால் தான் ஜெயிக்க முடியும் என நினைக்கிறது. இந்தநிலையில் குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவிற்காக டெல்லி சென்ற இபிஎஸ், மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்க்கு நேரம் ஒதுக்காத காரணத்தால் குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பிவிட்டார். இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பையும் மோடி சந்தித்து பேசுவார் என கூறப்பட்டது.
தமிழக பாஜக நிர்வாகிகளோடு மோடி ஆலோசனை
ஆனால் அதிமுக மோடி இருதரப்பையும் தனியாக சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நேற்று சென்னை விமான நிலையம் வந்த மோடியை இபிஎஸ் வரவேற்றுள்ளார் அப்போது மரியாதை ரீதியாக மட்டும் சந்தித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று இரவு பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேட்டுள்ளார். இதற்க்கு பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸ்-இபிஎஸ் பிரிவின் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுக ஓட்டு பிரிவடைய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர். அதே வேளையில் அதிமுக பிளவுபட்டதால் தமிழகத்தில் எதிர்கட்சியாக பாஜக வளர்வதற்க்கு வாய்ப்பாக அமையும் என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவை சரிசெய்ய பாஜக முயற்ச்சி செய்யுமா அல்லது பாஜக வளர்ச்சிக்காக அமைதி காக்குமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இதையும் படியுங்கள்