அமெரிக்க அதிபரையே அடித்து ஒரம் கட்டிய மோடி.. உலக புகழ்பெற்ற தலைவராக தேர்வு.. 71சதவீதம் மக்கள் ஆதரவு .

By Ezhilarasan BabuFirst Published Jan 21, 2022, 11:16 AM IST
Highlights

உலக வல்லரசான அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் 43 சதவீத மக்கள் ஆதரவுடன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். கன்னட ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ 43 சதவீத மக்கள் ஆதரவு பெற்றுள்ளார். ஆனால் அவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு 41 சதவீத அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற பிரதமர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். பிரதமர் மோடிக்கு 71 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43% ஆதரவைப் பெற்று 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கு முன்பு வரை இந்தியா என்ற சொல் ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு என்று மட்டுமே தெரியும். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி  பதவியேற்றதற்குப் பின்னர். அவர் எடுத்த திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாட்டு தலைவர்களுடனான சந்திப்புகள் சர்வதேச நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடி ஏழை எளிய நாடுகளுக்கு மருந்து மற்றும்  தடுப்பூசிகளை வாரி வழங்கியது மட்டுமல்லாமல், உலகின் வல்லரசு அமெரிக்காவுக்கே ஹைட்ரோகுளோரோ குயின்  மாத்திரைகளை கொடுத்து மக்களின் உயிரை காப்பாற்றினார். பிரதமர் மோடியின் இந்த செயல் சர்வதேச அளவில் இந்தியாவின் மனிதநேயத்தை பறைசாற்றியது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் கொடிய சீனா இந்திய எல்லையில் வால் ஆடியபோது முப்படைகளையும் சீனா நோக்கி திருப்பி இது தான் முடிவு என்றால் மோதிப் பார்க்கலாம் என பிரதமர் மோடி எல்லைக்கே சென்று முழங்கியது, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர வைத்தது. மனிதநேயமாக இருந்தாலும் சரி, வீரமாக இருந்தாலும் சரி பிரதமர் மோடிக்கு நிகர் மோடி தான் என்ற புகழ் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்தது. இந்நிலையில்தான் பிரதம் மோடிக்கு உள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மார்னிங் கன்சல்ட் பொலிட்டிக்கல் இன்டெலிஜென்ஸ் என்ற அமைப்பு உலகப் புகழ் பெற்ற தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. சக்திவாய்ந்த வல்லரசு நாடுகள் என கருதப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் தலைவர்களை மோடி பின்னுக்கு தள்ளி உள்ளார். அதாவது மார்னிங் கன்சல்ட் அரசியல் உளவுத்துறை நடத்திய கணக்கெடுப்பில், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சக்திவாய்ந்த மற்றும் வளர்ந்த நாடுகளின் தலைவர்களை காட்டிலும்  மோடியை அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்துள்ளார். 

குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் 43 சதவீத மக்கள் ஆதரவுடன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். கன்னட ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ 43 சதவீத மக்கள் ஆதரவு பெற்றுள்ளார். ஆனால் அவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு 41 சதவீத அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் 2வது இடத்தில் அதாவது பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் மெக்ஸிகோ ஜனாதிபதி  Andres Manuel Lopez Obradar 66% அங்கீகாரம் பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு, மூன்றாவது இடத்தில் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி உள்ளார் அவர் 60% மதிப்பீடுகளைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பே உலக தலைவர்களின் புகழ்பெற்ற பட்டியலில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2020 ஒப்பிடும்போது மோடியின் மதிப்பீடு சற்று குறைந்துள்ளது. மார்னிங் கன்சல்ட் அதன் மே 2020 அறிக்கையில் பிரதமர் மோடிக்கு 84 சதவீத ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மார்னிங் கன்சல்ட் பொலிட்டிக்கல் இன்டெலிஜென்ஸ் என்ற இந்த அமைப்பு உலக அளவில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள புகழ் மற்றும் அவர்களின் செயல்திறன் போன்றவற்றை கண்காணித்து வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகளில் கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு நடத்திய கணக்கெடுப்பின்படி ஜனவரி 13 மற்றும் 19 இடையில் சேர்க்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் அமைந்துள்ளது. ஜனாதிபதி பிடன் 43% வாக்குகளைப் பெற்றாலும், பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் UK PM ஜான்சன் ஆகியோர் 37%, 34% மற்றும் 26% ஆதரவை பெற்று குறைந்த பிரபலமான தலைவர்களாக தேர்வாகியுள்ளனர். 

ஜனவரி 2022 நிலவரப்படி, சராசரி இந்திய (எழுத்தறிவு) மக்கள்தொகையில் 71% பேர் பிரதமர் மோடியை ஆமோதித்ததாகவும், 21% பேர் மட்டுமே அவரை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆயினும்கூட, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட 49% அமெரிக்க மக்கள் அவரை விரும்பவில்லை. கூடுதலாக, குறைந்தபட்சம் 56% அமெரிக்க குடிமக்கள், வேலை செயல்திறன் துறைகளில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளை பிடன் விஞ்சவில்லை என்றும் இது காட்டுகிறது. அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 
 

click me!