மோடிதான் அலிபாபா….மத்திய அமைச்சர்கள்தான் 40 திருடர்கள்…. இப்படி கிண்டல் பண்ணிய பாஜக எம்.பி. !!

 
Published : Apr 23, 2018, 08:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
மோடிதான் அலிபாபா….மத்திய அமைச்சர்கள்தான் 40 திருடர்கள்…. இப்படி கிண்டல் பண்ணிய பாஜக எம்.பி. !!

சுருக்கம்

modi and his ministers are ali baba and 40 theives told sathrugan sinha

மத்தியில் இருப்பது “அலிபாபா மற்றும் 40 திருடர்களின் அரசு” என்பதை மக்கள் தெரிந்து வருகின்றனர் என்று பாஜக தலைவர்களுள்  ஒருவரான நடிகர் சத்ருகன் சின்ஹா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைத் தொடர்ந்து, நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கும் பாஜக-வுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளார். பாஜக-வில் மூத்த தலைவரான அத்வானியை புறந்தள்ளி விட்டு, மோடி பிரதமர் ஆனதிலிருந்தே அக்கட்சியைச்சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, நடிகர் சத்ருகன் சின்ஹா எம்.பி. ஆகியோர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி  ஆகியவை கொண்டுவரப்பட்டபோது, மோடிக்கு எதிராக பகிரங்கமாக தங்களின் கருத்தை வெளியிட்டனர். இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா பாஜக-வில் இருந்து விலகுவதாக  கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார். அவர் கட்சியை விட்டு போக வேண்டியவர்தான் என்று பாஜக-வும் கூறிவிட்டது.

இந்நிலையில் நடிகர் சத்ருகன் சின்கா பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருப்பதுடன் கட்சிக்குசவால் விடுத்து பேசி உள்ளார்.

நியூட்டனின் 3-வது விதியின்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்கும் என்பதை மோடியும் அவரது சகாக்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.

தற்போது  மத்தியில் இருப்பது “அலிபாபா மற்றும் 40 திருடர்களின் அரசு” என்பதை மக்கள் தெரிந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். “முடிந்தால் அவர்கள் என் மீது நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும்” என்றும் கூறியுள்ளார்.

மோடியையும் அவரது அமைச்சர்களையும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. ஒருவரே அலிபாபா மற்றும் 40 திருடர்களுடன் ஒப்பிப்டுப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!