அந்த ஆளு பேர சொல்லுறதுக்கே கூச்சமாக இருக்குதுங்க…. யாரைச் சொல்கிறார் தெரியுமா குஷ்பு ?

 
Published : Apr 23, 2018, 07:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
அந்த ஆளு பேர சொல்லுறதுக்கே கூச்சமாக இருக்குதுங்க…. யாரைச் சொல்கிறார் தெரியுமா குஷ்பு ?

சுருக்கம்

Actor Kushboo talk about H.Raja

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேரைச் சொல்லவே கூச்சமாக உள்ளது என்றும், அவரைப்பற்றி விமர்சனம் செய்வதென்றால் கீழ் மட்டத்துக்கு இறங்கி அடிக்க வேண்டும் ஆனால் எனக்கு அப்படிப் பேசி பழக்கமில்லை எனறும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து பன்வாரிலால் புரோகித் அது தொடர்பாக விளக்கம் அளித்தார்.

அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் கன்னத்தை தடவியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்சனையில் கருத்துத் தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கனிமொழி குறித்து ஆபாசமாக, அறுவறுத்தக்கதாக டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், சமுக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, எச்.ராஜா தரம் தாழ்ந்து அரசியல் நடத்துவதாக குறிப்பிட்டார். யாரை எப்படி பேச வேண்டும் ? என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லாதவர்  ராஜா என குற்றம்சாட்டினார்.

அவரின் பேரைச் சொல்லவே கூச்சமாக உள்ளது என்றும், அவரைப்பற்றி விமர்சனம் செய்வதென்றால் கீழ் மட்டத்துக்கு இறங்கி அடிக்க வேண்டும் ஆனால் எனக்கு அப்படிப் பேசி பழக்கமில்லை எனறும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த எஸ்.வி. சேகரின் கருத்து தவறானது என்றும் அவரா இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என ஆச்சரியமாக உள்ளது என்றும் குஷ்பு தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!