திராவிட மாடல் பெயரை கேட்டாலே அலறும் மோடி, அமித் ஷா.. மேடையிலேயே பாஜகவை கிழித்து தொங்கவிட்ட ஆ.ராசா.!

By vinoth kumarFirst Published Oct 10, 2022, 6:35 AM IST
Highlights

ஆர்எஸ்எஸ்சின் முக்கியமான கோரிக்கைகளை ஏற்காமல் கூட்டணி வைத்து பாஜக கையை கட்டிப்போட்ட பெருமை கருணாநிதியையே சேரும். 

பிடல் காஸ்ட்ரோ இப்போது இல்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தப்பு கணக்கு போட்டதை போல கருணாநிதி இல்லை என பாஜக தவறாக எண்ணுவதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார். 

சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுகவின் தலைவராக 2வது முறையாக  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், திமுகவின் துணை பொதுச்செயலாளராக மீண்டும்  பொறுப்பேற்ற பிறகு மேடையில் பேசிய ;- அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்று அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள் 'எப்போதாவது அங்கே மதத்தின் பெயரால் அரசியல் செய்து கொண்டிருக்கின்ற ஜனசங்கம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருமா' என்று கேட்ட பொழுது, 'ஒரு காலமும் அது நடக்காது. அப்படி நடந்தால் இந்தியா இந்தியாவாக இருக்காது' என்று 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அண்ணா சொன்னதை ஆ.ராசா நினைவு கூர்ந்தார். 

இதையும் படிங்க;- அண்ணா... அப்பா இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்.! உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பேன்- கண்கலங்கிய கனிமொழி

கொள்கை ரீதியாக பாஜவை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். அதற்கு பிறகு பாஜகவை கூட்டணியில் சேர்த்தும் கொண்டார். அப்பொழுது சிறுபான்மை மக்களுக்கு ஒரு பெரிய அச்சம் இருந்தது. ஆனால், கலைஞருடைய சாதுரியம், ராஜதந்திரம், கூட்டணி வைத்தும் குறைந்தபட்ச செயல்திட்டம் கொண்டு வர எழுதி கொடுத்தார். அதை தனது கரங்களால் எழுதியவர் முரசொலி மாறன். அதை நேரடியாக நான் பார்த்தேன். நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை எடுக்கக் கூடாது, நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம் மசூதியை இடித்து விட்டு ராமர் கோயிலை அயோத்தியில் கட்டக் கூடாது. நாங்கள் உங்களோடு கூட்டணியில் இருக்கிறோம் பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது. 

ஆர்எஸ்எஸ்சின் முக்கியமான கோரிக்கைகளை ஏற்காமல் கூட்டணி வைத்து பாஜக கையை கட்டிப்போட்ட பெருமை கருணாநிதியையே சேரும். திராவிட மாடலுக்கு மோடி அமித்ஷா அஞ்சுகின்றார். பிடல் காஷ்ட்ரோ இப்போது இல்லை என அமெரிக்கா நினைப்பதுபோல் , கருணாநிதி இல்லை என பிரதமர் மோடி நினைக்கிறார். கருணாநியிதிக்கு பின்னால் பாஜகவின் மதவாத வாலை ஒட்ட நறுக்குகின்ற ஒரே  தலைவர் ஸ்டாலின் தான் ஆ. ராசா ஆவேசமாக பேசியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஓபிஎஸ் அணிக்கு தாவிய மைத்ரேயன்..! அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய இபிஎஸ்

click me!