‘மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது’ - நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த ப.சிதம்பரம்

By Raghupati R  |  First Published Oct 9, 2022, 10:27 PM IST

கடந்த ஆறு மாதத்தில் தங்க இறக்குமதி மட்டும் ரூ.2000 கோடி டாலர்.அதாவது ரூ.160 ஆயிரம் கோடி. இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிர்காலம் என்று சொல்ல முடியாது.


திருப்பூர் மாவட்டதிற்கு இன்று வருகை புரிந்தார் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். காங்கயம் அருகே குட்டப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,’கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பாரம்பரிய இனங்களை பாதுகாக்கும் முயற்சிகளை, பாரம்பரிய மாடுகள் மட்டுமின்றி, மரங்கள், காய்கறி வகைகள் இவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.

Tap to resize

Latest Videos

நமது பாரம்பரியமான எண்ணங்களை எல்லாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது. இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால், நூறு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கி விற்றுள்ளது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க..திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை..பேச தயாரா? அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

கடந்த ஆறு மாதத்தில் தங்க இறக்குமதி மட்டும் ரூ.2000 கோடி டாலர்.அதாவது ரூ.160 ஆயிரம் கோடி. இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிர்காலம் என்று சொல்ல முடியாது. இதில்தான் மத்திய அரசு சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக கலந்தாலோசிப்பவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

சென்னை மயிலாப்பூரில் சென்று நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுண்டைக்காய் விலை என்ன ? கீரை விலை விலை என்ன ? என்று கேட்பது மட்டும் இதற்கெல்லாம் தீர்வாகாது. டாலருக்கு நிகராக, நமது ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கெனவே ஜப்பான் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியன கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதால், விலை உயரலாம். ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உயராவிட்டாலும் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும், பணவீக்க விகிதமும், ரூபாயின் மதிப்பும் சரிவதும், நாட்டின் பணவீக்க விகிதத்தை அதிகப்படுத்தும்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வெற்றிப் பயணம். இந்த யாத்திரை அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளை வீட்டை விட்டு வெளியில் வர வைத்துள்ளது. சாதாரண மக்கள் ஜோடோ யாத்திரை நடைபெறும் வழியெங்கும் இரு பக்கமும் நின்று வரவேற்கிறார்கள். மலர் தூவுகிறார்கள்’ என்று பேசினார்.

இதையும் படிங்க..‘இபிஎஸ் செய்த 41 ஆயிரம் கோடி ஊழல்.. ஓபிஎஸ் கையெழுத்து போடுவார் !’ அதிமுக பிரமுகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

click me!