மோடி அமித்ஷா தாய்மொழி குஜராத்தி, ஓட்டுக்காக இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள்.. தயாநிதி மாறன்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 15, 2022, 2:03 PM IST

இந்தியாவில் முன்னேறிய மாநிலங்கள் அனைத்தும் இந்தி பேசாத மாநிலங்கள் தான் என்றும்,  மோடி- அமித்ஷாவின் தாய்மொழி குஜராத்திதான், ஆனால் ஓட்டுக்காக அவர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்றும், திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். 


இந்தியாவில் முன்னேறிய மாநிலங்கள் அனைத்தும் இந்தி பேசாத மாநிலங்கள் தான் என்றும்,  மோடி- அமித்ஷாவின் தாய்மொழி குஜராத்திதான், ஆனால் ஓட்டுக்காக அவர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்றும், திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்தி திணிப்பை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் அவர் இவ்வாறு உரையாற்றினார். 

மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து இந்தி பேசாத மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தி திணிப்பையும், ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

அதில் திமுக முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம் என்றும்,  தொடர்ந்து இந்தியை திணிக்க முயன்றால், தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவோம் என உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார். மோடி அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் இந்தி தொடர்பாக பாராளுமன்ற விதிகளை மீண்டும் படிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்: Rahul: Bharat Jodo Yatra:பாரத் ஜோடோ நடை பயணம்: ராகுல் காந்தி 1000 கி.மீ தொலைவை எட்டினார்

மேலும், தமிழகத்தில் ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது என்றும், இந்தி தெரியாது போடா என்று நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்போம் என்றும் உதயநிதி பேசினார். அவரைத் தொடர்ந்து மேடையில் உரையாற்றிய தயாநிதி மாறன், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் நாங்கள் நன்றி சொல்லவேண்டும், எங்களது தமிழ் உணர்வை வெளிக் கொண்டுவர அவர்கள் உதவியிருக்கிறார்கள் முதலில் அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.

மோடி- அமித்ஷாவின் தாய்மொழி  ஹிந்தியா.?  ஹிந்தி இல்லாமல் இந்த 77 ஆண்டுகளில் இந்தியா முன்னேற வில்லையா? இந்தியாவில் முன்னணியில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் இந்தி தெரியாத மாநிலங்கள்தான், ஐஐடியில் உங்களால் இந்தியை கொண்டுவர முடியுமா? அவா ஒருபோதும் விட மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்: இது இளைஞர்கள் மத்தியில் பரவி போச்சு!இதோடு வெளிப்பாடு தான் சுவாதி,ஸ்வேதா,சத்யா கொலைகள்!பொங்கும் கொங்கு ஆறுமுகம்

அவா உங்களை இந்தியைக் கொண்டு வர விட மாட்டார்கள்,  2024 தேர்தலை மையப்படுத்தி மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் உங்கள் பருப்பு ஒருபோதும் தமிழகத்தில் வேகாது. இவ்வாறு தயாநிதி மாறம் எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

click me!