மாற்றான் போட்ட வழக்கில் மார்தட்டும் மக்கள் நீதி மய்யம்... டாஸ்மாக் விவகாரத்தில் நுழைந்து பெருமிதம்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2020, 4:56 PM IST
Highlights

வேறொருவர் போட்ட வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு தான் மட்டும் காரணம் என பெருமைப்பட்டு உரிமை கொண்டாடி வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
 

வேறொருவர் போட்ட வழக்கில் கிடைத்த தீர்ப்புக்கு தான் மட்டும் காரணம் என பெருமைப்பட்டு உரிமை கொண்டாடி வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

தனிமனித இடைவெளி காற்றில் பறக்கிறது , ஆதார் எண்ணை குறித்து வைத்து ரசீது கொடுக்கவில்லை என தனது முந்தைய தீர்ப்பை மதிக்காததால் தமிழகம் முழுக்க இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வந்த உடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் அதனை வரவேற்று ஒரு ட்வீட் போட்டார். ’’மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் இந்த வெற்றியை கொண்டாடுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் தொடுத்த வழக்கில் தான் இந்த வெற்றி என ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று , டாஸ்மாக் கடைகளை மூட செயலாளர் ஒரு உத்தரவு போட்டார். அதில் சில வழக்கு எண்ணை குறிப்பிடுகிறார். அந்த உத்தரவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ், தனது வழக்கில் கிடைத்த வெற்றி என்றும் இதை கமல்ஹாசன் ஏன் மடை மாற்றுகிறார் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

குழப்பம் தொடர்ந்து யார் வழக்கு என விவாதங்கள் ஆரம்பாகி விவாதம் நடக்கிறது. ஆனால் யார் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வெளியானது என்பது இப்போது தெரிய வந்துள்ளது. நீதிமன்றம் வெளியிட்டுள்ள குறிப்பில் வழக்கறிஞர் ராஜேஷ் குறிப்பிட்டுள்ள பிரிவுகளின் கீழ் உத்தரவிட்டுள்ளது குறிப்பிட்டு காட்டியுள்ளது உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது என ராஜேஸ் மற்றும் இன்னும் சிலர் வழக்கு போடுகிறார். அதில் மக்கள் நீதி மய்யம் இல்லை. ஆனால் உயர்நீதிமன்றம் திறக்க அனுமதித்து விடுகிறது. அதில் பல விதிகளையும் பிறப்பித்தது நீதிமன்றம். பின்னர் அந்த வழக்கு வரு 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடுமையான கூட்டம். உயர்நீதிமன்ற உத்தரவுகள் சிறிதளவு கூட யாராலும் மதிக்கப்படவில்லை. காரணம் அதனை செயல்படுத்தும் அளவுக்கு கூட நேரமில்லை, கட்டுக் கடங்காத கூட்டத்தில் அது சாத்தியமுமில்லை. இந்நிலையில் நேற்று மே 8ம் தேதி, ராஜேஸ் ஒரு வழக்கு போடுகிறார். அதில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிறார். இதே கோரிக்கையை வைத்து மக்கள் நீதி மய்யத்தில் ஏஜி மௌரியா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார். அவரும் மூட வேண்டும் என்கிறார். ஆக, இருவருமே மனு போட்டார்கள்.

உயர்நீதிமன்ற தீர்ப்பில் இருவரது பெயருமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜேஷின் முக்கியவத்துவமும் இங்கு குறிப்பிட வேண்டிய அவசிய உள்ளது. நீதிமன்ற உத்தரவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை ராஜேஷ் சமர்பித்துள்ளதை நீதிமன்றம் கோடிட்டு காட்டுகிறது. ராஜேஸ் தரப்பில் அவரே ஆஜராகினார். மௌரியா தரப்பில் வழக்கறிஞர் சுந்தரேசன் ஆஜரானார்.  இந்நிலையில் இந்த வழக்கின் வெற்றியை மக்கள் நீதி மய்யம் தனக்கான உரிமையாக கொண்டாடி வருகிறது. 

click me!