இந்தியா எடுத்த ஆபத்தான முடிவு..!! எங்கே போய் முடியப் போகிறதோ தெரியல..!!

By Ezhilarasan BabuFirst Published May 9, 2020, 4:32 PM IST
Highlights

பெரும்பாலான நோயாளிகள் மிகவும் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர் . அவர்களுக்கு இரண்டு முறை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை ,

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சாதாரண  காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு  இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது ,  கடுமையான காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு மட்டுமே அப் பரிசோதனை செய்யப்படும் எனவும் மத்திய அரசு வழிகாட்டு  நெறிமுறையில்  திருத்தம்  செய்துள்ளது ,  கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இதுவரை  இந்தியாவில் 59 ஆயிரத்து 662 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 1986 பேர் உயிரிழந்துள்ளனர் .   வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும்  அது மின்னல் வேகத்தில் பரவி வருகிறது அதேபோல் ஏராளமான மக்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு நாடு தள்ளப்பட்டிருக்கிறது .  எனவே மத்திய அரசு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளில் சிறிய திருத்தம் மேற்கொண்டுள்ளது ,  

அதாவது ஏற்கனவே வைரஸுக்கு ஆளாகி  டிஸ்சார்ஜ் ஆகும் நோயாளிகளுக்கு 14நாட்களுக்கு பின்னர் ஒருமுறையும் 21 நாட்கள் கழித்து மற்றொரு முறை என கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.தற்போது அதில்தான்  மாற்றம் செய்துள்ள மத்திய அரசு . பெரும்பாலான நோயாளிகள் மிகவும் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்புகின்றனர் .அவர்களுக்கு இரண்டு முறை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை ,  இதில் பலருக்கு சாதாரண காய்ச்சலும்  சாதாரண அறிகுறிகளுமே பதிவாகிறது எனவே அப்படி பட்டவர்கள் வெறும் 10 நாட்களில் குணமடைந்து  வெளியேற முடியும் ,சிலருக்கு மூன்று நாட்களில் காய்ச்சல் நின்றுவிடுகிறது என மத்திய அரசு தெரிவிக்கிறது .இருப்பினும் நோயாளிகள் மேலும் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

அப்படி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஒரு நோயாளிக்கு காய்ச்சல் இருமல் அல்லது சுவாச கோளாறு போன்ற அறிகுறிகள் மீண்டும் உருவானால் , அவர்கள் உடனடியாக கோவிட் பராமரிப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம் , பிறகு அவர்களது உடல்நிலை மீண்டும் 14 நாட்களுக்கு தொலைபேசியின் வாயிலாகவே கண்காணிக்கப்படும் என நெறிமுறையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 3 நாட்களுக்குள் காய்ச்சல் தணிந்த ஒரு நோயாளிக்கு மிதமான வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன்  செறிவு ஆகியவற்றை கண்காணித்து அடுத்த நான்கு நாட்களுக்கு ஆக்சிஜன் ஆதரவு இல்லாமல் 95 சதவீத அளவுக்கு அவர் குணமடைந்திருந்தால் அவர் பத்து நாட்களுக்குப் பிறகு வெளியேற்றப்படலாம் அவருக்கு காய்ச்சல் மருந்து, ஆக்ஸிஜன் உதவி போன்றவை தேவை இல்லை எனதெரிவிக்கப்பட்டுள்ளது

 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் குடியுரிமை மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாஸ் ராஜ்குமார் அதாவது வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சோதனை இல்லாமல் திருப்பி அனுப்பும் முடிவு மோசமான பேரழிவை ஏற்படுத்தும் , சோதிக்கப்படாத நபர்களால் சமூகத்தில் வைரஸ் பரவக்கூடும் ,  போதுமான சோதனை வசதிகளை ஏற்பாடு செய்யாமல் கடந்த  40 நாட்களாக  அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது , இன்னும் இரண்டு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்களை பறிகொடுக்க இந்தியா தயாராக இருக்கிறதா என எச்சரித்துள்ளார்.

 

click me!