“ரிசார்ட்டில் 12 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்” ஒரு எம்.எல்.ஏவுக்கு 4 பேர் காவல் - பகீர் தகவல்

 
Published : Feb 09, 2017, 06:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“ரிசார்ட்டில் 12 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்” ஒரு எம்.எல்.ஏவுக்கு 4 பேர் காவல் - பகீர் தகவல்

சுருக்கம்

கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் 12 எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் இருப்பதாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

“கோல்டன் பே ரிசார்ட்” எனும் கடற்கரை சொகுசு ஓட்டலில் 115 எம்.எல்.ஏக்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சிறைபிடித்த நிமிடத்திலிருந்து செல்போன் பேசகூடாது.

அப்படி செல்போன் பேசினால் ஸ்பீக்கரில் தான் பேச வேண்டும் என கடுமையான கட்டுபாடுகள் விதித்து மன உளைச்சலை உருவாக்கி உள்ளனர் சசிகலா தரப்பினர்.  

இன்று காலை அதுவும் கிடையாது செல்போன் ஜாமர் வைத்தமையால் குடும்பத்தினருடன் பேசமுடியாது என பல எம்.எல்,ஏக்கள் குமுறியுள்ளனர்.

மாற்று துணி கூட இல்லமால் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு வந்த எங்களை கொத்து கொத்தாக பேருந்தில் ஏற்றி ரிசார்ட்டில் போட்டுவிட்டதாக செய்தி சேகரிக்க சென்ற நிருபரிடம் குமுறியிருக்கிறார் ஒரு எம்.எல்.ஏ.

இதனால் மனம் வெருத்து போன 12 எம்.எல்.ஏக்கள் விடுதலை செய்ய வேண்டும் என காலையில் இருந்து சாப்பிடாமல் அடம் பிடித்து வருகின்றனர்.

எம். எல்.ஏக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த நிர்வாகிகள் கடும் கட்டுபாடுகள் விதிப்பதால் சிறை பிடிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் கடும் அதிர்ச்சிக்கும் எரிச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

ஒரு எம்.எல்.ஏவுக்கு 4 பேர் காவல் இருப்பதால் எரிச்சலின் உச்சத்துக்கே சென்றுள்ளனர் எம்.எல்.ஏக்கள்.

போகிற போக்கை பார்த்தால் 12 எம்.எல்.ஏக்களும் ஒரே ஓட்டம் பிடித்து ஓ.பி.எஸ்ஸிடம் சரண் அடைந்து விடுவார்கள் என்றே தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு