இஸ்லாமியர்களுக்காக முதலமைச்சரை சந்தித்த புலிப்படை எம்எல்ஏ கருணாஸ்..!! முதலமைச்சர் கொடுத்த அதிரடி பதில்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 10, 2020, 2:23 PM IST
Highlights

அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள  ஒரு முஸ்லிம் கூட இதில் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று  ஜமாத்தாரகளுடன் கருணாஸ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததுடன்,  இஸ்லாமியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.   இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்களை முக்குலத்தோர் புலிப் படை தலைவர் கருணாஸ் அவர்கள் சந்தித்து குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக,  முஸ்லிம் சமூகத்தில் நிலவும் அச்சங்களை போக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் , 

அப்போது  அவருடன் மஜக பொதுச் செயலாளர்  மு.தமிமுன் அன்சாரி MLA, பொருளாளர் ஹாரூண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் தைமியா ஆகியோரும், கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜமாத்தார்களும், முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் முஸ்லிம் நண்பர்களும் உடன் சென்றனர்.அப்போது அவர்களுக்கு  பதில் அளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  இது குறித்து இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள  ஐயங்களை களைய , அதிகாரிகளுடன் பேசுவதாக கூறினார்.  அதேபோல் , அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் உள்ள  ஒரு முஸ்லிம் கூட இதில் பாதிக்கப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார். 

இச்சந்திப்பின் போது அமைச்சர் நிலோபர் கபீல், ஹஜ் கமிட்டி தலைவர் ஜப்பார் ஆகியோரும் உடனிருந்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் அவர்கள், தமிழகத்தில் அமைதி,  ஒற்றுமை நிலவ பாடுபட வேண்டும் என்றார்,   தமிழகத்தில் ஜமாத்துகளும், முஸ்லிம் மக்களும் அச்சத்தில் உள்ளனர், அதை போக்கும் வகையில் இச்சந்திப்பு மேற்கொண்டதாக கருணாஸ் தெரிவித்தார்.  

click me!