நாளை உள்ளாட்சி மறைமுக தேர்தல்... உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

Published : Jan 10, 2020, 12:38 PM IST
நாளை உள்ளாட்சி மறைமுக தேர்தல்... உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

உள்ளாட்சி மறைமுக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை  வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உள்ளாட்சி மறைமுக தேர்தல் வாக்கு எண்ணிக்கையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றக்கிளை பதிவாளர் விளக்கம் அளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாளை ஊரக உள்ளாட்சி மறைமுக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!