எடப்பாடி அரசின் தலைவிதியை தீர்மானிக்கப்போவது இவர்தான்...!

First Published Jun 18, 2018, 5:42 PM IST
Highlights
MLA qualification removal case - 3rd judge Vimala?


18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனைத் தொடர்ந்து 3-வது நீதிபதி, இந்த வழக்கை விசாரிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது நீதிபதியாக விமலா அவர்களை, நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளதால், மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த மூன்றாவது நீதிபதி யார் என்பதை, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் இன்று மாலை அறிவிப்பார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர்  கடந்த ஆண்டு ஆளுநராக இருந்த வித்யா சாகர் ராவிடம்  புகார் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 

அவர்கள் கடந்த 14 ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்கினர். அதில் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா அவர்கள் விசாரிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதி விமலா அவர்களை, நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

click me!