சட்டமன்றத்திலேயே பேசப்பட்ட "விஜய் டிவி செந்தில் ராஜலக்ஷ்மி"...! அடேங்கப்பா... என்ன வளர்ச்சி....!

First Published Jun 27, 2018, 12:33 PM IST
Highlights
mla paramasivam talks about singer senthil rajalakshmi in assembly today


கிராமப்புற கலைஞர்களான செந்தில் ராஜலக்ஷ்மி மட்டும் போதாது.. இவர்களை போன்று நிறைய பேர் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தார்.

நடைப்பெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீது இன்று விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏ பரமசிவம், கிராம  புற பாடல்களைபாடி அசத்தும் கிராமப்புற கலைஞர்கள் ஒரு செந்தில் ராஜலட்சுமி மட்டும் போதாது. இதே போன்று மேலும் பல கலைஞர்களை உருவாக்க வேண்டும் என கோரினார்.

விஜய் டிவியில், ஜோடி புறாக்களாக பாடி வரும் செந்தில் ராஜலக்ஷ்மி உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றனர். காரணம் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பது கூடுதல் பலமாக கருதப்பட்டாலும், நாட்டுப்புறப்பாட்டு பாடுவதில் மட்டும் அதிக கவனம் செலுத்தி இன்று வெற்றி மேல் வெற்றி குவித்து வருகின்றனர்

இவர்களுடைய புகழ் தற்போது சட்டமன்றத்தில் பேசும் அளவிற்கு வந்துள்ளது என்றால் பாருங்களேன். தமிழக மக்கள் மனதில் எந்த அளவிற்கு அவர்கள் இடம் பிடித்து உள்ளனர் என்று...

வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏவான விபிபி பரமசிவம் ஒரு ஆர்த்தோ டாக்டர்.

இவர் முன்னாள் துணை சபாநாயகர் பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் என்பது  குறிப்பிடத்தக்கது. இன்று  சட்டசபையில்  கிராமப்புற பாட்டு குறித்து கருத்து தெரிவித்த   பரமசிவம், நேற்று கூட  சமூகவலைத்தளம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் அதிகரித்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவையற்ற வதந்தி பரப்புவோரின் விவரத்தை பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் போலீஸுக்குத் தர வேண்டும். போலீஸுக்குத் தகவல் தர மறுக்கும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களைத் தமிழகத்தில் இருந்து அரசு துரத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் இன்று, நாட்டுப்புறப்பாடகர் செந்தில்-ராஜலக்ஷ்மி பற்றி சட்டசபையில் புகழ்ந்து பேசினார் மருத்துவர் எல்எல்ஏ வான பரமசிவம் என்பது  குறிப்பிடத்தக்கது. 
 

click me!