ஒத்தைக்கு ஒத்தை தயார் : தமிழிசை சவாலை ஏற்றார் அன்புமணி!

 
Published : Jun 27, 2018, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
ஒத்தைக்கு ஒத்தை தயார் : தமிழிசை சவாலை ஏற்றார் அன்புமணி!

சுருக்கம்

anbumani ramadoss Tamilisai challenge

ஒத்தைக்கு ஒத்தை தயார், தமிழிசை சவுந்தரராஜனின் சவாலை ஏற்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். வருகிற 29-ம் தேதிக்குப் பிறகு அவருடனான விவாதத்துக்கு நாள் குறிக்கப்பட்டால் அதில் நான் பங்கேற்கிறேன் என்று சேலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனால் இருவரின் பார்த்தை போர் உச்சத்தை எட்டியுள்ளது. 

முன்னதாக தொலைகாட்சி நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் குறித்து ராமதாஸ் மீது தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் சென்னை பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்ததால் மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில் புத்திசாலித்தனம் இல்லாத மாதிரி பதிவுகளை அன்புமணி போட்டு வருகிறார். 20 ஆண்டுகால கடினமான உழைப்புக்கு அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால்தான் ஒரு கட்சியின் தலைவராகியுள்ளேன்.

நான் அரசியல் கட்சி தலைவரின் மகள்தான். ஆனால் அந்த நிழலில் நான் நிச்சயமாக தலைவராகவில்லை. எனது சுயஉழைப்பினால் தலைவராகியுள்ளேன் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் யார் உண்மையான அரசியல்வாதி, யாருக்கு தகுதி இருக்கிறது என்பதை நேருக்கு நேர் விவாதிக்க தயார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தரராஜன், அன்புமணிக்கு பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழிசை சவாலை ஏற்கிறேன் என அன்புமணி கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!