கோயிலுக்கு சென்றால் முதல்வராக முடியுமா என்ன? மக்கள் நினைத்தால்தான் முடியும்...! ஸ்டாலினை தாக்கும் ஜெயக்குமார்

Asianet News Tamil  
Published : Jun 27, 2018, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
கோயிலுக்கு சென்றால் முதல்வராக முடியுமா என்ன? மக்கள் நினைத்தால்தான் முடியும்...! ஸ்டாலினை தாக்கும் ஜெயக்குமார்

சுருக்கம்

Minister Jayakumar criticise M.K.Stalin

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றால் முதலமைச்சராகி விடலாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்; மக்கள் நினைத்தால் மட்டுமே முதலமைச்சராக முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பட்டினப்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

பொறுப்புள்ள மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, பொன்.ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக் கூடாது. திமுகவுடன் எங்களுக்கு கூட்டு கிடையாது. வாழ்நாள் முழுவதும் எங்களுடைய அரசியல் எதிரி திமுக. 

திமுக எதிர்ப்பு எங்களுடைய ரத்தத்தில் கலந்தது. அது எப்போதும் தொடரும் என்றார். கடவுள் பக்தி விவகாரத்தில் திமுக கொள்கை என்ன என்பது தெரியவில்லை. கோயிலுக்கு செல்வது நல்ல விஷயம்தான். ஆனால் இரட்டை வேடம் போடக் கூடாது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றால் முதலமைச்சராகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். மக்கள் நினைத்தால்தான் முதலமைச்சராக முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!