
ஓ.பி.எஸ்க்கு மணிக்கு மணி ஆதரவு கூடி வருகிறது. இன்னும் 9 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ்யிடம் வந்துவிட்டால் அதிமுக ஆட்சி கலைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, ஊத்தங்கரை எம்.எல்.ஏ., மனோரஞ்ஜிதம் நாகராஜன், சோழவந்தான் எம்.எல்.ஏ., மாணிக்கம், வாசுதேவநல்லூர் மனோகர் ஆகியோரை தொடர்ந்து தூத்துக்குடி முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த ஐந்து பேரை தவிர்த்து சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் வெளியே வரும் பட்சத்தில் கொத்து கொத்தாக கூட ஓ.பி.எஸ் வுடன் இணைய வாய்ப்பிருப்பதாக ஓ.பி.எஸ் உடன் இருக்கும் முக்கிய நிர்வாகி தெரிவித்தார்.
வரலாம் வரலாம் வா பைரவா என்ற தீம் மியூசிக் மக்கள் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.