
சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோரை தொடர்ந்து மேலும் ஒரு எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு நிலவுகிறது.
இன்று காலை அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 129 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக கூறப்பட்டது.
ஆனால் 110 எம்.எல்.ஏக்கள் தான் கலந்து கொண்டதாக கூறுகின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
இது இப்படி இருக்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ மனோரஞ்சிதம் நாகராஜன் ஓ.பி.எஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தனது தார்மீக ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுவரை மூன்று எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்த்து நான்கு பேர் மைனஸ் ஆகிறது.
அதனால் 130 ஆக குறைந்து விட்டது அதிமுகவின் பலம். மேலும் பலர் ஓ.பி.எஸ்வுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
ஆனால் ஓ.பி.எஸ் தரப்போ 50 லிருந்து 60 பேர் வர வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிமுக அரசு தொடருமா என்ற மிகபெரிய கேள்விக்குறி எழுத்துள்ளது.
ஓ.பி.எஸ்ஸை சந்தித்துவிட்டு கருத்து தெரிவித்த மனோ ரஞ்சிதம் நாகராஜன் மேலும் பல எம்.எல்.ஏக்கள் வர உள்ளதாக தெரிவித்தார்.