டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...! அதிமுகவினர் அட்டகாசம்

Published : Oct 25, 2018, 03:37 PM IST
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வீட்டு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...! அதிமுகவினர் அட்டகாசம்

சுருக்கம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் எம்.எல்.ஏ.ஜெயந்தி வீட்டு முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் எம்.எல்.ஏ.ஜெயந்தி வீட்டு முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில், தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நியாயமாக வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே. தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏக்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள். 

இன்று மாலை குற்றாலம் சென்று 18 பேருடன் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சென்னை, அதிமுக தலைமையகத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் சென்றனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துணை முதலமைச்சர் உட்பட மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் மகிச்சி தெரிவித்தனர். 

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே, நீதிமன்ற வாயிலில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து தங்களது சந்தோஷத்தை வெளியிட்டனர். உயர்நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜெயந்தி வீட்டு முன்பும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குடியாத்தம் பகுதி நரியம்பட்டு பகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ஜெயந்தி வீட்டு முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர். மேலும் ஜெயந்தியின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!