பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார் இளவரசி

By manimegalai aFirst Published Oct 25, 2018, 2:46 PM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளவரசி, 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளவரசி, 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை பெற்று வருகின்றனர். 

இந்த நிலை0யல், இளவரசி, 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கான மனுவை சிறை நிர்வாகத்திடம் இளவரசி அளித்திருந்தார். அந்தில், தனது சகோதரருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இளவரசிக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது சகோதரரை பார்க்க இளவரசி பரோலில் வெளிவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரோல் கிடைத்ததை அடுத்து சிறையில் இருந்து இளவரசி வெளியே வந்தார். வெளியே வந்த அவருக்கு பல்வேறு நிபந்தனைகளின் பேரில் பரோல் வழங்கப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரது சகோதரரை நாளை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது., 

click me!