மடக்கிப்பிடித்த மு.க.ஸ்டாலின்... டாக்டருக்கு செம ஆஃபர்... கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக்க பலே திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published May 21, 2021, 11:09 AM IST
Highlights

கொங்கு மண்டலத்தில் அதிமுக பலத்தை தகர்க்க மு.க.ஸ்டாலின் மெனக்கெட்டு வருகிறார். இப்போது முதலே அப்பகுதிகளில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன்படி மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். 
 

கொங்கு மண்டலத்தில் அதிமுக பலத்தை தகர்க்க மு.க.ஸ்டாலின் மெனக்கெட்டு வருகிறார். இப்போது முதலே அப்பகுதிகளில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். அதன்படி மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் முயற்சியை முடுக்கி விட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமல்ஹாசனுடனான கருத்து மோதலால் வெளியேறிய டாக்டர் மகேந்திரன், விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த மகேந்திரன். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கோவையில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்று அனைத்து தரப்பையும் வியக்க வைத்தவர் மகேந்திரன்.
 
கோவையில் டாக்டர் மகேந்திரனுக்கு இருந்த செல்வாக்கை வைத்தே சென்னையை தவிர்த்து விட்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் கமல்ஹாசன். ஆனால் கமல் தோற்றது வெறும் 2000 ஒட்டுக்கும் குறைவாகத்தான். அதேபோல சிங்காநல்லூரில் போட்டியிட்ட டாக்டர் மகேந்திரனும் 36,855 வாக்குகளை பெற்று 3வது இடமும் பிடித்தனர்.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக பதவிகளை ராஜினாமா செய்து விட்டு நடையை கட்டி வருகின்றனர்.தொடர்ந்து ஒரு வாரமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விழுகின்றன. அவர் திமுகவில் சேரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கொங்கு திமுகவில் தகவல் சுற்றி கசிந்துள்ளது .

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பொருளாதார ரீதியாக முக்கிய பொறுப்பில் இருந்தவர் தான் மகேந்திரன். இவருக்கு கோவையில் தனிப்பட்ட செல்வாக்கு அவருக்கு அதிகம். எனவே மாவட்டத்தில் முக்கிய பொறுப்பை மகேந்திரனுக்கு வழங்கலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளதாம். இதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டதாக கொங்கு மண்டலத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

இப்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கூட கொங்கு மண்டலத்தில் மட்டும் திமுகவை விட அதிமுக அதிக வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலினும் தேர்தலுக்கு முன்பிலிருந்தே தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் உள்ளூர் தலைவர்களை வைத்து கட்சியை பலப்படுத்த நினைக்கிறார்.

இதற்கு முன்பாக காங்கேயத்திலிருந்து கார்த்திகேய சிவசேனாபதியை வரவழைத்து தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சராக இருந்த வேலுமணிக்கு எதிராக போட்டியிட வைத்தது திமுக தலைமை. சிவ சேனாதிபதி தோல்வியடைந்திருந்தாலும் அவரை ராஜ்யசபா எம்பியாக்க உள்ளார் ஸ்டாலின்.

அதேபோலத்தான் கோவை மண்டலத்தில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் மகேந்திரனுக்கு முக்கிய பதவி காத்திருப்பதாக சொல்கிறார்கள். மேற்கு மண்டலம் தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். அங்கு தொழில்களை நடத்தும் தொழிலதிபர்கள், ஓட்டுக்கள் எந்த பக்கம் செல்லும் என்பதை தீர்மானிக்கிறார்கள். ஏற்கனவே மகேந்திரனுக்கு தொழிலதிபர்களிடம் நல்ல பழக்கம் இருப்பதால், தமிழ்நாடு தொழில்துறை மேம்பாடு கழகத்தில் முக்கிய பொறுப்பு கொடுத்தால், தொழில் அதிபர்கள் மத்தியில் திமுகவுக்கான செல்வாக்கு எகிறும் என நினைக்கிறார் ஸ்டாலின்.

click me!