மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் பலகை மூலம் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அறிவிக்க முடிவு.. அமைச்சர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published May 21, 2021, 11:05 AM IST
Highlights

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களை உறவினர்கள் பார்க்கவருவதை தவிர்க்கும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் டிஜிடல் பலகை மூலம் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பான அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி மற்றும் சிகிச்சை குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு.  

இந்து கோவில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றப்படும் என்ற அரசின் முடிவை டிவிட்டர் மூலம் ஜக்கிவாசுதேவ் போன்ற மாற்று கருத்து உடையவர்களும் வரவேற்றிருப்பதாக கூறினார். ஆட்சி பொருப்பேற்ற 15 நாட்களில் அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் எதிரிகளும் பாரட்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உறுவெடுத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, 18வயது நிறம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அடுத்த ஒருவாரத்திற்குள்  கூடுதலாக ஆக்சிஜன் வசதி கொண்ட 172 படுக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவசர ஊர்தியில் தொற்றாளர்கள் சிகிச்சைக்கா காத்திருக்கும் நிலையை தவிர்க்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களை உறவினர்கள் பார்க்கவருவதை தவிர்க்கும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் டிஜிடல் பலகை மூலம் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பான அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

click me!