வாரிசுகளுக்கு வரிசை கட்டி சீட் வழங்கிய மு.க.ஸ்டாலின்... குமுறும் திமுக நிர்வாகிகள்...

Published : Mar 12, 2021, 08:11 PM ISTUpdated : Mar 12, 2021, 08:16 PM IST
வாரிசுகளுக்கு வரிசை கட்டி சீட் வழங்கிய மு.க.ஸ்டாலின்... குமுறும்  திமுக நிர்வாகிகள்...

சுருக்கம்

சட்டப்பேரவை தேர்தலில் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், பெரும்பாலும் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

சட்டப்பேரவை தேர்தலில் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், பெரும்பாலும் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

திமுக கூட்டணி தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து களம் காண்கிறது. இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 2 நாட்களுக்கு முன்னரே வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில் விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மாலை மதிமுகவும், இரவு விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதிப்படுத்தப்பட்டன. இதையடுத்து இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  மகன் உதயநிதி, மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வாரிசு வேட்பாளர்கள் விவரம்;- 

* கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதி 

*  ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு சேப்பாக்கம் தொகுதி 

*  ஐ. பெரியசாமி மகன் செந்தில்குமாருக்கு பழனி தொகுதி

*  பொய்யாமொழி மகன் மகேசுக்கு திருவறும்பூர் தொகுதி

*  க. அன்பழகன் பேரன் வெற்றி அழகனுக்கு வில்லிவாக்கம் தொகுதி

*  தூத்துக்குடி பெரியசாமி மகளுக்கு கீதா ஜீவனுக்கு தூத்துகுடி தொகுதி

*  ஆலடி அருணா மகளுக்கு  பூங்கோதைக்கு தொகுதி ஆலங்குளம் தொகுதி

*  தங்கப்பாண்டியன் மகன் தங்கம் தென்னரசுக்கு திருச்சுழி தொகுதி

* TR பாலு மகன் TRB ராஜா க்கு மன்னார்குடி தொகுதி

* PTR பழனிவேல் ராஜன் மகன் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதி

மேலும், கலைஞரின் நடைப்பயிற்சி தோழர் பேராசிரியர் நாகநாதனின் மகன் டாக்டர் எழிலன், சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன், தி.நகர் ஜெ.அன்பழகன் தம்பி ஜெ.கருணாநிதி, கே.பி.பி. சாமியின்  சகோதரர் சங்கர், பெரியண்ணன் மகன் இன்பசேகரன், காஞ்சிபுரம் அண்ணாமலையின் பேரன் எழிலரசன் என வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!