கே.சி.வீரமணிக்கும், துரைமுருகனுக்கு ரகசிய உடன்பாடு... சீட் கிடைக்காத விரக்தியில் பெண் அமைச்சர் பகீர் புகார்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2021, 8:00 PM IST
Highlights

தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபீர் கூறியுள்ள பகீர் குற்றச்சாட்டு அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

அதிமுகவில் இறுதியாக வெளியான வேட்பாளர்கள் பட்டியலில் 41 சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், 3 சீனியர் அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலான பகுதிகளில் அதிமுக கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர் கபீர் கூறியுள்ள பகீர் குற்றச்சாட்டு அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

வாணியம்பாடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலோபர் கபில், வாணியம்பாடியில் நான் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை என என் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் என் சமுதாய மக்கள் பாஜகவை ஏற்கவில்லை. இதனால், வாக்குகள் சரிந்தன. இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? கேள்வி எழுப்பினார். திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரான அமைச்சர் கே.சி.வீரமணி தான் திட்டமிட்டே தனக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டார் என்றும் குற்றச்சாட்டினார். 

மேலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் இடையே மாமன், மச்சான் போல் உறவும், ரகசிய உடன்பாடும் இருப்பதாக பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார். ஏலகிரி மலையில் இதற்காக தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி காட்பாடியில் செல்வாக்கு இல்லாத ராமு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜோலார்பேட்டையில் வாணியம்பாடியைச் சேர்ந்த தேவராஜ் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.  

click me!