மனம் மாறிய மு.க.ஸ்டாலின்... அஞ்சாநெஞ்சன் செம ஹாப்பி அண்ணாச்சி..!

Published : May 11, 2021, 07:03 PM IST
மனம் மாறிய மு.க.ஸ்டாலின்... அஞ்சாநெஞ்சன் செம ஹாப்பி அண்ணாச்சி..!

சுருக்கம்

விரைவில் மதுரைக்கு செல்லும் அவர் அண்ணன் அழகிரியை பார்த்து, ஆசிர்வாதம் வாங்கும் முடிவில் இருக்கிறாராம். 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைப்பெற்றது. இதில் திமுக - காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளுடனும், அதிமுக - பாஜகவுடனும் களம் கண்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது திமுக. அதோடு 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.

 

50 வருடம் அரசியலில் இருந்தாலும், இப்போது தான் முதல் முறையாக அரியணை ஏறி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து பலர் ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரி அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். ”திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனது கண்டு பெருமைபடுகிறேன். அவர் எனது தம்பி. அவருக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் அவர் நல்லாட்சி தருவார்” என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு, அழகிரிக்கும், அவரது குடும்பத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். அழகிரியோ இந்த விழாவிற்கு தன் மகன், மகளை அனுப்பி வைத்திருந்தார். இதனால், ஸ்டாலின் ரொம்பவே நெகிழ்ந்து போய் விட்டார். விரைவில் மதுரைக்கு செல்லும் அவர் அண்ணன் அழகிரியை பார்த்து, ஆசிர்வாதம் வாங்கும் முடிவில் இருக்கிறாராம். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!