மீண்டும் சர்ச்சை கிளப்பிய திமுக எம்எல்ஏ.. சட்டப்பேரவைக்குள் விதியை மீறி செல்போன் பயன்படுத்திய டிஆர்பி.ராஜா..!

Published : May 11, 2021, 06:29 PM ISTUpdated : May 11, 2021, 06:33 PM IST
மீண்டும் சர்ச்சை கிளப்பிய திமுக எம்எல்ஏ.. சட்டப்பேரவைக்குள் விதியை மீறி செல்போன் பயன்படுத்திய டிஆர்பி.ராஜா..!

சுருக்கம்

சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறி மன்னார்குடி திமுக எம்எல்ஏ TRP.ராஜா  செல்போன் பயன்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறி மன்னார்குடி திமுக எம்எல்ஏ TRP.ராஜா  செல்போன் பயன்படுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்குளே செல்போன் பயன்படுத்தக்கூடாது என்பதால் அரங்கத்திற்கு வெளியே உள்ள லாக்கரில் செல்போனை வைத்துவிட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. முதல் நாளில் புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு தமிழக சட்டப்பேரவை தற்காலிக சாபநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்துக்கொண்டிருந்தார். 

அப்போது, மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி.ராஜா விதிமுறைகளை மீறி சட்டப்பேரவை அரங்கில் செல்போனில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 2011ம் ஆண்டு பேரவையின் போது செல்போனில் வீடியோ எடுத்ததால்  டிஆர்பி.ராஜாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு 10 நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!