அசலுக்கு வட்டி... அமமுகவுக்கு அல்வா கொடுத்த தேமுதிக வேட்பாளர்..!

Published : May 11, 2021, 06:53 PM IST
அசலுக்கு வட்டி... அமமுகவுக்கு அல்வா கொடுத்த தேமுதிக வேட்பாளர்..!

சுருக்கம்

பணம் கைக்கு வந்தவுடன் கூட்டணி கட்சியான அமமுக கட்சிக்காரர்களுடன் இணக்கமாக பேசிக் கொண்டு இருந்தாராம் அந்த வேட்பாளர்.   

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கட்சிக்காரர்களுக்கும், தேமுதிகவினருக்கும் பூத் செலவுக்குக் கூட கட்சி தலைமையில் இருந்து பணம் வழங்கவில்லை என அக்கூட்டணியினர் மனம் வெதும்பிக் கிடந்தனர். இந்த நேரத்தில் தேமுதிக கட்சியில் இருந்து தொகுதிக்கு என ஏதோ கொஞ்சம் பணத்தை கொடுத்தார்கள். அதில், குப்பம் தனி தொகுதியில் தேமுதிக கட்சி சார்பில் போட்டியிட்ட குடியாத்தம் செண்டத்தூர்  கிராமத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு, அவர் செலவழிச்சத விட அதிகமாக ரூ.10 லட்சம் வரைக்கும் கொடுத்து இருக்கிறார்கள். பணம் கைக்கு வந்தவுடன் கூட்டணி கட்சியான அமமுக கட்சிக்காரர்களுடன் இணக்கமாக பேசிக் கொண்டு இருந்தாராம் அந்த வேட்பாளர். 

பணம் கைக்கு வந்த உடனே, அவரை  தொடர்பு  கொள்ளவே முடியவில்லை. செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார் என்கிறார்கள். வீடு  தேடி போய், அமமுக- தேமுதிகவினர் பார்த்தாலும், வீட்டில் ஆள் இல்லை என திருப்பி அனுப்புகிறார்களாம். கட்சி தலைமை கொடுத்ததையே கொடுக்காமல் இப்படி  தலைமறைவு ஆகிவிட்டாரே என தெமுதிக- அமமுகவினர் புலம்புகிறார்கள். ஆனால் வேட்பாளரோ போட்ட அசலுக்கு வட்டி வந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு கதவை முடிக்கொண்டு சிரிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!