உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வரை விமர்சிப்பதா..? திமுகவுக்கு எதிராக கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ..!

By vinoth kumarFirst Published Jun 10, 2020, 11:34 AM IST
Highlights

தமிழகம் என்பதற்கான விருதுகளைக் குவித்து வந்த வெள்ளந்தித் தலைவனை, விவசாயிகள் கொண்டாடி மகிழும் உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வரை விமர்சித்த கே.என்.நேருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகம் என்பதற்கான விருதுகளைக் குவித்து வந்த வெள்ளந்தித் தலைவனை, விவசாயிகள் கொண்டாடி மகிழும் உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வரை விமர்சித்த கே.என்.நேருக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். 

கோவையில் மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணம் அமைச்சர் வேலுமணிதான் என திமுகவிலிருந்து குற்றச்சாட்டு எழுந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தானே வேலுமணிக்கு எதிராக போராட்டத்தில் இறங்குவேன் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலினை விமர்சித்து வேலுமணி அறிக்கை வெளியிட்டார். அதற்கு பதிலளித்து கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையில், இன்னும் 11 மாதங்களில் கோவை மத்திய சிறையில் வேலுமணி அடைக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்ட அறிக்கையில், சமூகப் பரவல் என்னும் நிலைக்குத் தமிழகம் ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக அல்லும் பகலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அயராது போராடி வருகிறது. ஆனால், இத்தகைய இக்கட்டான தருணத்தில் அரசுக்குத் துணை நிற்காமல், அவதூறு அறிக்கைகள் விடுத்து அரசியல் நடத்துகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தான் பதில் சொல்வதற்கு பதிலாக கே.என்.நேருவை விடுத்து அறிக்கை வெளியிட வைத்திருக்கிறார் ஸ்டாலின் என்றும், பொதுவாழ்க்கையின் மூலம் சொத்துக்களை குவித்தவர் நேரு என்றும் குற்றம்சாட்டிய செல்லூர் ராஜூ, ஜெயலலிதாவின் வழியில் அற்புத ஆட்சி நடத்துகிற தமிழக முதல்வரை, இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம் என்பதற்கான விருதுகளைக் குவித்து வந்த வெள்ளந்தித் தலைவனை, விவசாயிகள் கொண்டாடி மகிழும் உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வரை நேரு விமர்சித்து அறிக்கை வெளியிடுகிறார்.

அதுபோல கடந்த 10 வருடங்களில் மட்டும் 123 தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறைக்கு வென்று வந்து, இந்தியாவின் தலை சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம் என்னும் பெருமையை தேடித் தந்த வேலுமணியை, நேருவால் களங்கப்படுத்தவே முடியாது என்றும் கூறியுள்ளார்.

click me!