விரைவில் நாடாளுமன்ற தேர்தல்..! ராஜினாமா முடிவு கைவிடுங்கள்- சரத்பவாருக்கு ஸ்டாலின் கோரிக்கை

By Ajmal Khan  |  First Published May 5, 2023, 11:18 AM IST

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நாடு முழுவதும் மதசார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த வேண்டியுள்ளதால் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 


சரத்பவார் பதவி விலகல்

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் திடீரென விலகியுள்ளார்.  சரத் பவாரின் சுயசரிதை நூலின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு  தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது அப்போது,  தான் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடிவை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சரத்பவார் இல்லம் முன்பாக கூடி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரையாவது சரத்பவார் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Latest Videos

ஜன் கி பாத் - ஏசியாநெட் மெகா சர்வே: கர்நாடகா தேர்தல் களம் மாறுகிறதா? பாஜகவுக்கு கைகொடுக்கும் 2 மண்டலங்கள்!!

புதிய தலைவர் யார்

இந்தநிலையில் தொண்டர்கள் முன்பாக பேசிய சரத்பவார்,  கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் தொண்டர்களை கேட்டுக்கொண்டிருந்தார்.  இந்தநிலையில் தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இநய்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரை தொடர வைக்க வலியுறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது .

<

With national politics centred around upcoming 2024 General Elections, I request, Thiru. , one of the tallest leaders, crucial in strengthening secular alliance across India, to reconsider his decision to relinquish the President post of and continue to…

— M.K.Stalin (@mkstalin)

p> 

 

முடிவை கைவிடுங்கள்- ஸ்டாலின்

அதே நேரத்தில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சாகு தலைவர் பதவிக்கு கொண்டுவரவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியா முழுவதும் மதசார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமானதலைவர்களில் ஒருவராக நீங்கள் உள்ளீர்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தலைவர் பதவியில் இருந்த விலகல் என்ற முடிவை வாபஸ் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

இப்படியே போச்சுனா அதிமுக அவ்வளவு தான்.. ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு அறிவுரை சொல்லும் ஜெயலலிதா உதவியாளர்

 

click me!