அரியணை யாருக்கு? எகிறிய மு.க.ஸ்டாலின்..! தடுமாறிய எடப்பாடி..! பதுங்குகிறதா அதிமுக?

By Selva KathirFirst Published Aug 8, 2020, 9:44 AM IST
Highlights

6வது முறையாக திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அதை பற்றி மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அதிமுகவினரையே யோசிக்க வைத்துள்ளது.

6வது முறையாக திமுகவை அரியணையில் ஏற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அதை பற்றி மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது அதிமுகவினரையே யோசிக்க வைத்துள்ளது.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 2ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக தலைமை சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. கலைஞர் மருத்துவமனையில் இருந்தது முதல் தற்போது வரையிலான நிகழ்வுகளை தொகுத்து அந்த வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலின் பின்னணி குரல் கொடுத்திருந்த அந்த வீடியோவின் இறுதியில் கலைஞர் நினைவு நாளில், திமுகவை 6வது முறையாக அரியணை ஏற்றுவது என்று திமுகவினர் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 6வது முறையாக திமுக அரியணை ஏறும் என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரியணை யாருக்கு என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார். இதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்ட போதும் அரியணை யாருக்கு என்பதை மக்கள் தான் முடிவு செய்ய முடியும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வரும், தொடர்ந்து 3வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வரும் என்றெல்லாம் பதில் சொல்லாமல் அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது நேற்று விவாதப் பொருள் ஆனது. அடுத்த முறை ஆட்சிக்கு வருவது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பது அவரது அறிக்கைகள், வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் இதே உறுதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லையா? என்கிற கேள்வி நேற்றைய அவரது பேட்டி மூலம் எழுந்துள்ளது. தற்போது அதிமுக அரசுக்கு தலைமை பொறுப்பில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் களம் காணும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நிலைமை இப்படி இருக்க, அடுத்த முறை யார் ஆட்சிக்கு வருவார்கள் என்கிற எளிமையான கேள்விக்கு கூட எடப்பாடியிடம் உறுதியான பதில் இல்லை என்பது அவரது மன நிலை என்ன என்பதை தெரிய வைப்பதாக உள்ளது. பொதுவா கசெய்தியாளர் சந்திப்பிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு தயாரிப்புகளுடன் வருவது வழக்கம்.உதாரணமாக என்ன என்ன பிரச்சனை உள்ளது, செய்தியாளர்கள் என்ன என்ன கேள்விகள் கேட்க வாய்ப்பு உள்ளது என்பதை எல்லாம் முன்கூட்டியே யூகித்து அதற்கு பதில்களை தயார் செய்யும் வழக்கம் எடப்பாடிக்கு உண்டு.

ஆனால் நேற்றைய தினம் இப்படி ஒரு கேள்வியை எடப்பாடி எதிர்பார்த்திருக்கமாட்டார் என்கிறார்கள். திடீரென கேள்வி அப்படி வந்த நிலையில் அதனை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறிவிட்டு எடப்பாடி சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் அது ஒரு பொதுவான கேள்வி என்கிற பட்சத்தில் அதற்கு முழு நம்பிக்கையுடன் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொல்லாமல் மக்களை எடப்பாடி கை காட்டியது ஏன்? என்கிற கேள்வி  தான் அதிமுகவினரையே ஆட்டிப்படைக்கிறது.

மறுபடியும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்கிற நம்பிக்கை முதல்வருக்கே இல்லையா என்றும் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதே சமயம் அடுத்த முறை திமுக தான் ஆட்சிக்கு வரும் என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு உறுதியாக இருப்பதும் அதிமுகவினரை யோசிக்க வைத்திருக்கும். எனவே தனது அடுத்தடுத்த பேட்டிகளில் அதிமுகவினருக்கு உற்சாகம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும்எ ன்று நிர்வாகிகள் கருத ஆரம்பித்துள்ளனர்.

click me!